Fire பட எதிரொலி.. பாலாஜிக்கு வாழ்நாளில் மறக்க முடியாத பரிசு கொடுத்த ரசிகர்.. எமோஷனல் மூவ்மெண்ட்

3 days ago
ARTICLE AD BOX

Fire பட எதிரொலி.. பாலாஜிக்கு வாழ்நாளில் மறக்க முடியாத பரிசு கொடுத்த ரசிகர்.. எமோஷனல் மூவ்மெண்ட்

Television
oi-V Vasanthi
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த பாலாஜி முருகதாஸ் ஃபயர் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்த நிலையில் அந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு ரசிகர் ஒருவர் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை சற்றும் எதிர்பார்க்காத பாலாஜி முருகதாஸ் எமோஷனலாக அந்த வீடியோவை பகிர்ந்து இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் ரன்னர் அப் ஆக தேர்வான பாலாஜி முருகதாஸ் தற்போது ஃபயர் திரைப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் இவர்தான் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். பாலாஜி முருகதாஸ் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் கமிட்டானார் ஆனால் அந்த திரைப்படம் முழுமையாக சூட்டிங் எடுக்கப்படவில்லை.

Balaji Murugadoss Vijay TV

ஆனால் ஃபயர் திரைப்படம் பாலாஜி முருகதாஸ் நடிப்பில் வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படம் பாலாஜி முருகதாஸுக்கு அவரே எதிர்பார்க்காத அளவிற்கு பிரபலத்தை கொடுத்து இருக்கிறது. ஒரு சிலர் பாலாஜி முருகதாஸை திட்டி தீர்த்து வந்தாலும் இதுவும் தன்னுடைய நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என்று நெகிழ்ந்து போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார்.

Balaji Murugadoss Vijay TV

அதுபோல ஆரம்பத்தில் ஒரு சில தியேட்டர் மட்டுமே ஃபயர் திரைப்படத்திற்கு கிடைத்திருந்த நிலையில் இப்போது இந்த திரைப்படத்திற்கு இருக்கும் வரவேற்பை பார்த்து தியேட்டர் விரிவடைந்து இருப்பது பாலாஜி முருகதாஸுக்கு மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது. ஃபயர் திரைப்படம் விழிப்புணர்வு ஏற்படுத்து படமாக இருந்தாலும் அதிகமான ஆபாச காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் ஒரு சிலர் முகம் சுளித்து வந்தாலும் இந்த திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

Balaji Murugadoss Vijay TV

இந்த நிலையில் நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலாஜி ஒரு பதிவு வெளியிட்டிருந்தார். அதில், எனது பர்சனல் விஷயங்களை நான் எப்போதும் சமூக வலைத்தளங்களில் பதிவிடமாட்டேன். ஆனால் இப்போது ஒரு நல்ல காரணத்திற்காக போஸ்ட் ஒன்றை பதிவு செய்திருக்கிறேன்.

ஒரு வருடத்திற்கு முன்னால் விபத்து ஒன்றில் சிக்கிவிட்டேன். என்னுடைய முதுகெலும்பு வீங்கி இருந்தது. அந்த சமயத்தில் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். என்னால் ஆறு மாத காலம் சரியாக நடக்க கூட முடியவில்லை. பத்துக்கு மேற்பட்ட மருத்துவர்களிடம் ஆலோசித்தேன். ஆனால் எதுவும் சரியாகவில்லை மிகவும் சோர்வடைந்து விட்டேன். இடுப்பு, கால் வலி இருந்தும் வின்னர் படத்தில் வரும் வடிவேலு மாதிரி நடக்க ஆரம்பித்தேன்.

திடீரென ஒரு நாள் எனக்கு வலி நீங்கி விட்டதே உணர்ந்தேன். இப்போது எனது ஃபயர் திரைப்படம் தியேட்டரில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது என்ற வெற்றியை என்னால் வார்த்தைகளால் விளக்க முடியாது. என் மீது கருணை காட்டும் இந்த பிரபஞ்சத்திற்கு நன்றி. உன்னை உடைக்கிற நாட்கள் தான் உன்னை உருவாக்கும் நாட்கள் என்று பதிவிட்டு இருந்தார்.

Balaji Murugadoss Vijay TV

இந்த நிலையில் பாலாஜி முருகதாஸ் தியேட்டர் ஒன்றுக்கு போனபோது அங்கு அவருடைய ரசிகர்கள் சிலர் தங்க சங்கிலி ஒன்றை பரிசாக அணிந்திருக்கிறார்கள். இது தன்னுடைய நடிப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் என்று நெகிழ்ந்து அந்த வீடியோவை பகிர்ந்து இருக்கிறார் .

More From
Prev
Next
English summary
Balaji Murugadoss, who became famous through the Bigg Boss show, was playing the villain in the film. Balaji Murugadoss, who does not expect this, shares the video as emotional.
Read Entire Article