Fair Delimitation: 7 மாநில முதல்வர்களின் அரசியல் உரைகள்; முன்வைத்த முக்கிய கருத்துகள் என்ன?

14 hours ago
ARTICLE AD BOX

மத்திய அரசின், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு ஒருங்கிணைக்கும் 7 மாநில பிரதிநிதிகள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, பஞ்சாப் ஆகிய மாநில முதல்வர், ஒடிசா முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட 7 மாநிலங்களைச் சேர்ந்த 29 அரசியல் கட்சி தலைவர்கள் இதில் பங்கேற்றிருந்தனர். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு 'நியாயமான தொகுதி மறுசீரமைப்புக்கான கூட்டு நடவடிக்கைக் குழு' எனப் பெயரிடப்பட்டது.

ஒவ்வொரு மாநில முதல்வர்கள், துணை முதல்வர்கள், முக்கியத் தலைவர்களின் பெயர் பலகையில் அந்ததந்த மாநில மொழிகளில் எழுத்தப்பட்டது கவனம் பெற்றிருந்தது.
தொகுதி மறுசீரமைப்புக்கான கூட்டு நடவடிக்கைக் குழு

தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் கலந்துகொண்ட விருந்தினர்களுக்கு, பத்தமடை பாய், தோடர்களின் சால்வை, காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப்புடவை, ஊட்டி வர்க்கி, கன்னியாகுமரி கிராம்பு, கோவில்பட்டி கடலை மிட்டாய், ஈரோடு மஞ்சள், கொடைக்கானல் பூண்டு ஆகிய தமிழ்நாட்டின் சிறப்பு வாய்ந்த பொருள்கள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த பெட்டியில் அடுக்கப்பட்டு பரிசாக வழங்கப்பட்டது.

Fair Delimitation: ஒருங்கிணையும் 7 மாநில பிரதிநிதிகள் - சென்னையில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம்

இக்கூட்டத்தை ஒருங்கிணைத்த தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், "இந்திய கூட்டாட்சியை காக்கும் வரலாற்றின் மிக முக்கியமான நாள் இது." என்று தனது உரையை ஆரம்பித்தார். ஸ்டாலின், ரேவந்த் ரெட்டி, பினராயி விஜயன், பகவந்த் சிங் உள்ளிட்டவர்கள் மத்திய அரசின் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை தென்னிந்திய மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகளைக் குறைத்து அரசியல் அதிகாரத்தையும் குறைத்துவிடும் என்று அழுத்தமாகப் பேசியிருந்தனர்.

அவற்றில் தென்னிந்திய மாநில முதல்வர்கள் முன்வைத்த சில முக்கியமான அரசியல் கருத்துகள் என்பதைப் பார்க்கலாம்.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின்:

*தொகுதி மறுசீரமைப்பால் நமது பண்பாடு , அடையாளம், முன்னேற்றம், சமூகநீதி ஆபத்தை சந்திக்கிறது.

*தமிழ்நாடு 6 முதல் 10 நாடாளுமன்ற தொகுதிகளை இழக்க நெரிடும்.

தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்:

*தென்னிந்திய மாநிலங்கள் பொறுப்புடன் நிலையான மக்கள்தொகை வளர்ச்சியை அடைந்தால் வளர்ச்சியடைந்துள்ளோம்.

* மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பால் தற்போது அரசியல் பிரதிநிதித்துவத்தை இழக்கும் அபாயத்தில் உள்ளோம்.

Fair Delimitation: ``இது பா.ஜ.க வின் ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும்'' - கேரள முதல்வர் பினராயி விஜயன்

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி:

*வட மாநிலங்களை விடவும் நாங்கள் அதிகமான வரிகளை மத்திய அரசுக்கு கொடுக்கிறோம். ஆனால், தொகுதிகளை குறைத்து, அரசியல் அதிகாரத்தையும் குறைக்கப் பார்க்கிறது மத்திய அரசு.

*1976-ல் பிரதமராக இருந்த இந்திரா காந்தி (காங்கிரஸ்), 2001ம் ஆம் ஆண்டு பிரதமாரக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய் (பா.ஜ.க) இருவரும் எந்தவித தொகுதிகளையும் குறைக்காமல் தொகுதி மறுவரையறையைச் செய்தனர்.

*எம்.பி தொகுதிகள் குறைக்கப்பட்டால் தென்னிந்தியா அரசியல் அதிகாரத்தை இழக்கும், எம்மக்கள் இரண்டாம்தர குடிமக்களாக மாறிவிட நேரிடும்.

ரேவந்த் ரெட்டி, பினராயி விஜயன், பகவந்த் சிங் மான்

கேரள முதல்வர் பினராயி விஜயன்:

*தென் மாநிலங்களின் எம்.பி சீட்களின் எண்ணிக்கை குறைவது பாஜகவின் ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும். குறுகிய அரசியல் லாபத்திற்காகத் தொகுதி மறுசீரமைப்பைப் பயன்படுத்த பாஜக நினைக்கிறது.

*மாநில உரிமைகள், கூட்டாச்சி என்பது மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கும் சலுகை அல்ல. அது மாநில அரசுகளின் உரிமை. இது இந்தியாவின் ஆன்மா சம்பந்தப்பட்டது.

பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான்:

*மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும் தண்டனை தொகுதி மறுசீரமைப்பு.

*எங்கெல்லாம் பா.ஜ.க விற்கு வெற்றி வாய்ப்பு உள்ளதோ, அந்த மாநிலங்களை மட்டும் கவனித்துவிட்டு, மற்ற மாநிலங்களை வஞ்சிக்கிறது.

*தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு 100 சதவீதம் ஒத்துழைப்பு வழங்குவோம்.

மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறையைக் கண்டித்து அடுத்தக் கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெறவிருக்கிறது. Fair Delimitation: "சொந்த நாட்டில் அரசியல் அதிகாரத்தை இழக்கும் சூழ்நிலை" - முதல்வர் ஸ்டாலின்

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

Read Entire Article