ARTICLE AD BOX
நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தலில், 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்துள்ளது பாஜக. ஆனால், டெல்லியின் முதலமைச்சரை தேர்வு செய்வதில் மிகுந்த சிக்கல் மற்றும் குழப்பம் ஏற்பட்டு சுமார் 10 நாட்கள் ஆகியும் அறிவிக்காமல் இருந்தனா்.
இந்தநிலையில்தான், பாஜக எம்.எல்.ஏ.வான ரேகா குப்தா என்பவரை டெல்லிக்கு முதல் அமைச்சராக பாஜக நியமித்தது. இதன்மூலம், டெல்லி சட்டசபைக்கு நான்காவது பெண் முதல்வராக ரேகா குப்தா பதவியேற்று கொண்டார்.
ரேகா குப்தாவின் இளம் வயது வீடியோ என்று கூறி ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உண்மையாகவே இந்த வீடியோவில் இருப்பது ரேக்கா குப்தாதானா?
எக்ஸ்தளத்தில் பயனர் ஒருவர் வெளியிட்ட வீடியோவில், ஒரு பெண் குளத்திலிருந்து தண்ணீர் எடுப்பது போன்றும், வாள் பயிற்சி செய்வது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
52 வினாடிகள் கொண்ட அந்த காணொளியில், “ இது டெல்லியின் புதிய முதல் அமைச்சர் ரேகா குப்தாவின் பழைய வீடியோ ” என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது 127000 பார்வையாளர்களையும் 3700 விருப்பங்களையும் பெற்றுள்ளது. பலரும் இதனை ஷேர் செய்து வருகின்றனர்.
ஆனால், உண்மை சரிபார்ப்பு சோதனை செய்யப்பட்டதில், நடிகை பயல் ஜாதவ் வீடியோவும் கிடைத்தன.
உண்மை என்ன?
கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான பாப்லியோக் திரைப்படத்தின் மூலம் மராத்தி படங்களில் அறிமுகமானார் பயல் ஜாதவ். மேலும், மராத்தி தொலைக்காட்சித் தொடர்களிலும் இவர் நடத்திருக்கிறார்.
மராத்தி நடிகையான பயல் ஜாதவ் கடந்த பிப்ரவரி 19 , 2025 அன்று இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இதில் அவர் வெளியிட்ட கேப்ஷன்னில் , “ 'சிவராயனின் எட்டாவது வடிவம். சிவராயனின் எட்டாவது மகிமை. சிவராயனின் எட்டாவது வெளிப்பாடு. பூமண்டலி. சத்ரபதி சிவாஜி மகாராஜின் மகத்தான செயல்களுக்கு வணக்கம். ஆயுத வல்லுநர் மற்றும் பிரதாப்புரந்தர் போன்ற மகத்தான மகாராஜாக்களால் ஈர்க்கப்பட்டநான் செய்யும் சிறிய முயற்சி இது.' என்று பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம், டெல்லி முதலமைச்சர் ரேக்கா குப்தாவிற்கும், இந்த வீடியோவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது உண்மை என தெரியவந்தது. மேலும், ரேகா குப்தாவின் இளம் வயது புகைப்படங்கள் மேலே இணைக்கப்பட்டுள்ளது.