Ethirneechal: அம்பலமாகிய காதல் விவகாரம்! தர்ஷனுக்கு மிரட்டல் விடுத்த அறிவுக்கரசி

4 days ago
ARTICLE AD BOX

எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷன் காதலித்து ஏமாற்றிய பெண் போலிசில் புகார் கொடுப்பதாக ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

எதிர்நீச்சல்

பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதைக் கவர்ந்து வருகின்றது.

முதல் பாகத்தில், ஆணாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பது போன்று அமைக்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் பாகத்தில் அதே ஆணாதிக்கம் தொடர்கின்றது.

ஆனால் பெண்கள் அனைத்து சவால்களையும் எதிர்த்து போராடி வருகின்றனர். கதிர் அப்படியே குணசேகரனாக மாறி பல மோசமான காரியங்களை செய்து வருகின்றார்.

தர்ஷன் ஏற்கனவே ஒரு பெண்ணைக் காதலித்து வந்த நிலையில், தற்போது பணத்திற்காக வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்யப் போகின்றார்.

குறித்த பெண் வீட்டில் வந்த பிரச்சனை செய்ததால் தர்ஷனை குடும்பத்தில் பெண்கள் அனைவரும் அறைக்குள் வைத்து பூட்டி அடித்தனர்.

இந்நிலையில் தர்ஷனின் முன்னாள் காதலி தன்னிடமிருந்த அனைத்து ஆதாரங்களை அளித்துள்ள நிலையில், ஈஸ்வரியின் உதவியுடன் போலிசில் புகார் அளிப்பதற்கு தயாராகியுள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     
Read Entire Article