ARTICLE AD BOX
Ethirneechal Serial: தன் மனைவி மற்றும் மகள், தம்பி மனைவிகள் கொடுத்த புகாரால், ஜெயிலில் இருந்து வரமுடியாமல் தவிக்கும் தன் அப்பா ஆதி குணசேகரனை தன் திருமணத்தின் மூலம் திரும்ப வீட்டிற்கு அழைத்து வரலாம் என முடிவெடுத்துள்ளான் தர்ஷன். இதற்காக, இத்தனை நாளாக வலிய சென்று காதலித்து வந்த பார்கவி எனும் பெண்ணை தற்போது கண்டுகொள்ளாமல் மிரட்டுவதுடன், மிக கேவலமாகவும் நடத்துகிறான்.
பார்கவி வீட்டிற்கு சென்ற அடியாட்கள்
அத்துடன் நில்லாமல், தன் சித்தப்பாக்களுடன் சேர்ந்து, அறிவுக்கரசி வீட்டில் சம்பந்தமும் முடித்துள்ளனர். அந்த சமயத்தில் தர்ஷன் வீட்டிற்கு வந்த பார்கவி, வீட்டில் உள்ள பெண்களிடம் தர்ஷனை பற்றிய அனைத்து உண்மைகளையும் கூறினாள். இதனால், ஆத்திரமடைந்த தர்ஷன் பார்கவியை திட்டியதுடன் இதுகுறித்து அறிவுக்கரசிக்கும் தெரியவந்தது. பின், அறிவுக்கரசி தன் அடியாட்களை வைத்து பார்கவி குடும்பத்தை அடித்து துன்புறுத்தி இருக்கிறாள்.
போலீஸ் புகாரளிக்க திட்டம்
அந்த சமயம் பார்கவிக்கு ஆறுதல் கூற அவளது வீட்டிற்கு வந்த ஈஸ்வரி, ஜனனிக்கும் சேர்த்தே அடி விழுந்தது. இதனால், ஆத்திரம் தாங்காத ஜனனியும், ஈஸ்வரியும், இவர்களின் ஆட்டத்திற்கு முடிவு கட்ட நினைத்து தர்ஷன் மேல் போலீஸில் புகாரளிக்கலாம் என யோசனை தருகின்றனர். ஆனால், இதற்கு பார்கவி மறுப்பு தெரிவித்தாள். பின் மனம் மாறிய அவள், ஈஸ்வரிக்கு போன் செய்து தர்ஷன் மேல் புகாரளிக்க சம்மதம் கூறினாள்.
ஆதாரம் தேடும் பெண்கள்
இதையடுத்து, புகாரளிக்க ஈஸ்வரியும், ஜனனியும் கிளம்பிய சமயத்தில், ரேணுகா, நந்தினி, தர்ஷினி மற்றும் சிறுவர்கள் எல்லோரும் தர்ஷன் ரூமில் ஏதாவது ஆதாரம் சிக்குகிறதா என தேட வந்தனர். அப்போது, தர்ஷனுக்கு கூட்டாளியாக இப்போது தன் கணவர் கதிர் இருப்பதால், என் ரூமில் ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என பார்ப்பதாக நந்தினியும் கூறினாள்.
கதிர் பதுக்கிய பணம்
அப்போது, கதிர், வீட்டில் உள்ள யாருக்கும் தெரியாமல், ஒரு டிராவல் பேக் முழுவதும் கட்டுக்கட்டாக பணத்தை மறைத்து வைத்துள்ளார். இதைப் பார்த்த நந்தினிக்கு பதற்றம் அதிகரித்தது. அதே சமயம், தர்ஷன் ரூமுக்குள் தர்ஷினி, மற்றும் சிறுவர்கள் இருக்கும் சமயத்தில் தர்ஷன் ரூமுக்கு வருகிறான். இதனால் எல்லோரும் அங்குள்ள கபோர்டுகளில் ஒளிந்து கொள்கின்றனர்.
வீட்டில் நடந்த பஞ்சாயத்து
பணத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த நந்தினி, இது குறித்து வீட்டில் உள்ளவர்களிடம் கூற அது பஞ்சாயத்தாய் வெடிக்கிறது. என்ன செய்து இவ்ளோ பணத்தையும் எடுத்துட்டு வந்த என சக்திவேல் கேள்வி கேட்க அதெல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாது என திமிறாக பதில் சொல்கிறான். இதற்கிடையில், ஜனனி, டெலவரி செய்ய வேண்டிய ஆர்டர்களை உடனடியாக அனுப்ப வேண்டும் என போன் வரவே எல்லாரும் சோகமாகின்றனர்.
இதையடுத்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் என்ன நடக்கிறது எனத் தெரிந்து கொள்ள திங்கள் முதல் சனி வரை எதிர்நீச்சல் தொடரை சன் டிவியில் பாருங்கள். அல்லது சன் நெக்ஸ்ட் தளத்தை பாருங்கள்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்