EPFO சூப்பர் முடிவு.. பிஃஎப் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு வேலூர் அதிகாரி சொன்ன நல்ல செய்தி

3 hours ago
ARTICLE AD BOX

EPFO சூப்பர் முடிவு.. பிஃஎப் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு வேலூர் அதிகாரி சொன்ன நல்ல செய்தி

Vellore
oi-Velmurugan P
Subscribe to Oneindia Tamil

வேலூர்: வருங்கால வைப்புநிதி அமைப்பில் உறுப்பினர் சேவைகளை மேம்படுத்துவதற்கும், உறுப்பினர் தரவுகளின் துல்லியத்தை உறுதி செய்வதற்கும் தனது உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இ.பி.எப்.ஓ.) உறுப்பினர் சுயவிவரத்தை புதுப்பிக்கும் செயல்பாட்டை எளிமைப்படுத்தியுள்ளது. இந்த தகவலை வருங்கால வைப்புநிதி வேலூர் மண்டல ஆணையர் ரித்தேஷ் பஹ்வா கூறியுள்ளார்.

இதுகுறித்து வருங்கால வைப்புநிதி வேலூர் மண்டல ஆணையர் ரித்தேஷ் பஹ்வா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "உறுப்பினர் சேவைகளை மேம்படுத்துவதற்கும், உறுப்பினர் தரவுகளின் துல்லியத்தை உறுதி செய்வதற்கும் தனது உறுதிப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இ.பி.எப்.ஓ.) உறுப்பினர் சுயவிவரத்தை புதுப்பிக்கும் செயல்பாட்டை எளிமைப்படுத்தியுள்ளது. திருத்தப்பட்ட நடைமுறையின் கீழ், யுனிவர்சல் கணக்கு எண் (யு.ஏ.என்) அடிப்படையில் ஏற்கனவே ஆதார் மூலம் சரிபார்க்கப்பட்ட உறுப்பினர்கள் எந்த ஆவணத்தையும் பதிவேற்ற வேண்டிய அவசியமின்றி புதுப்பிக்க முடியும். 1.10.2017-க்கு முன்னர் யு.ஏ.என். பெறப்பட்ட சில சந்தர்ப்பங்களில் மட்டுமே, புதுப்பித்தலுக்கு வேலை வழங்குநரின் சான்றிதழ் தேவைப்படும்.

epfo vellore pf money

இ.பி.எப்.ஓ. தரவுத்தளத்தில் இ.பி.எப். உறுப்பினரின் தனிப்பட்ட தரவின் நிலைத்தன்மை, நம்பகத்தன்மை சேவைகள் தடையின்றி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கும், மோசடி அபாயத்தைத் தவிர்ப்பதற்கும் இது மிக முக்கியமானது.

உறுப்பினர் விவரங்களை மாற்ற அல்லது திருத்த வேண்டிய தேவை ஏற்பட்டால், தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும், தங்கள் கோரிக்கைகளை இணையதளத்தில் தாக்கல் செய்யவும் உறுப்பினர்களுக்கு ஒரு செயல்பாடு ஏற்கனவே கிடைக்கப் பெற்றுள்ளது. இத்தகைய கோரிக்கைகள் வேலை வழங்குனரால் இணையதளத்தில் அங்கீகரிக்கப்பட்டு இறுதி ஒப்புதலுக்காக இ.பி.எப்.ஓ.-வுக்கு அனுப்பப்படும். பல்வேறு நிலைகளில் கோரிக்கைகள் நிலுவையில் உள்ள சுமார் 3.9 லட்சம் உறுப்பினர்களுக்கு இந்த திருத்தம் உடனடியாக பயனளிக்கும்.

இணையதள நடைமுறையில் இந்த எளிமைப்படுத்தல், உறுப்பினர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றவும், தரவு நிலைத்தன்மையை உறுதி செய்யவும், பிழைகள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும், உறுப்பினர்களுக்கு திறமையான சேவையை வழங்கவும், வாழ்க்கையை எளிதாக்கவும் உதவும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
English summary
Reflecting its commitment to improving member services in the provident fund system and ensuring accuracy of member data, the Employees' Provident Fund Organisation (EPFO) has simplified the process of updating member profile.
Read Entire Article