ARTICLE AD BOX
EPFO கொண்டுவரவுள்ள 2 புதிய அம்சங்கள்.. இனி உறுப்பினர்களுக்கு வீண் அலைச்சலே இல்லை!
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) கீழ் கோடிக்கணக்கான உறுப்பினர்கள் உள்ளனர். EPFO அமைப்பு PF பணத்தை எளிதாக எடுக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. இதற்கு முன்னர் PF பணத்தை பெறுவது என்பது மிகவும் சிக்கலான செயல்முறையாக இருந்தது. எனவே EPF உறுப்பினர்கள் தங்கள் பணத்தை வசதியாக எடுக்க UPI அறிமுகம் செய்யப்படவுள்ளது.
EPFO அமைப்பு யூபிஐ மூலம் PF பணத்தை எடுக்கும் புதிய வசதியை அறிமுகப்படுத்த ஒரு ப்ளூபிரிண்ட் தயாரித்துள்ளதாகவும், மேலும் இந்த புதிய வசதியை செயல்படுத்த இந்திய தேசிய கொடுப்பனவுக்கு கழகத்துடன் (NPCI) பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வசதி அடுத்த 2 முதல் 3 மாதங்களில் செயல்படுத்தப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூபிஐ மூலம் PF பணம் பெறுவதனால் ஏற்படும் நன்மைகள் என்ன?: யூபிஐ அறிமுகப்படுத்தப்பட்டால் PF பணத்தை எடுக்கும் செயல்முறை எளிதாகும். பொதுவாக 7 நாட்கள் வரை பிஎப் பணம் எடுப்பதற்கு நேரமாகலாம். இந்த யுபிஐ ஒருங்கிணைப்பின் மூலம் சில மணி நேரங்களில் உங்களுடைய பரிவர்த்தனையை முடிக்க முடியும். இதன் முக்கிய நன்மைகளில் மற்றொன்று என்னவென்றால் உங்கள் pf பணம் எடுக்கும் கோரிக்கை நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் குறைவாகும். அதோடு கிராமப்புறங்களில் இருப்பவர்களும் எளிதாக தங்கள் வீட்டில் இருந்தே பணம் எடுக்க முடியும்.
இந்த வசதி குறித்து EPFO இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை. இது குறித்து EPFO முறையான அறிவிப்பை வெளியிடும் போது மட்டுமே கூடுதல் தகவல்கள் கிடைக்கும். இது தவிர, EPFO 3.0 திட்டத்தின் கீழ் அதன் உறுப்பினர்களுக்கான ATM வசதியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
EPFO ஏடிஎம் என்பது ஒரு புதிய வசதியாகும். இதன் மூலம் EPF உறுப்பினர்கள் தங்களுடைய PF தொகையை நேரடியாக ஏடிஎம்-இல் இருந்து எடுக்க முடியும். பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்காகவும், தங்களுடைய சேமிப்பை காகிதமற்ற முறையில் எடுப்பதற்காகவும் இந்த வசதி கொண்டுவரப்பட உள்ளது. ஒரு டெபிட் கார்டை போலவே EPFO ஏடிஎம் கார்டு செயல்படும். பணத்தை எடுக்க நீங்கள் உங்கள் UAN நம்பரை ஏடிஎம் கார்டுடன் இணைக்க வேண்டும். ஓடிபி சரிபார்த்த பின்னர் PF பணத்தை எடுக்க வேண்டும். இந்த வசதி மூலம் ஒரு நிறுவனத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்காமல் உங்கள் பிஎப் பணத்தை எடுக்கலாம்.