ENG vs AUS: 352 ரன்கள் சேஸிங்! இங்கிலாந்துக்கு வில்லான இங்கிலிஷ்! கர்ஜித்த ஆஸ்திரேலியா

3 days ago
ARTICLE AD BOX

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி பென் டக்கெட்டின் அபார சதத்தால் 351 ரன்களை குவித்தது.

352 ரன்கள் டார்கெட்:

இதையடுத்து, 352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. டிராவிஸ் ஹெட் 6 ரன்னிலும், ஸ்மித் 5 ரன்னிலும் அவுட்டாக ஷார்ட் - லபுஷேனே ஜோடி சேர்ந்தது. இருவரும் இணைந்து பொறுப்பாக ஆடினார். ஷார்ட் அடித்து ஆடினார். அவர் பவுண்டரிகளாக விளாச லபுஷேனே ஒத்துழைப்பு தந்தார்.

ஆட்டத்தை மாற்றிய இங்கிலிஷ் - கேரி:

இந்த பார்ட்னர்ஷிப் 100 ரன்களை நெருங்கியபோது ரஷீத் இந்த பார்ட்னர்ஷிப்பை உடைத்தார். அவரது பந்தில் லபுஷேனே 47 ரன்னில் அவுட்டாக, அதிரடி காட்டிய ஷார்ட்டும் அவுட்டானார். அவர் 63 ரன்களில் அவுட்டாக 136 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து ஆஸ்திரேலியா தடுமாறியது. இதனால், ஆட்டம் இங்கிலாந்தின் பக்கம் செல்ல இங்கிலிஷ் - கேரி பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

இருவரும் இணைந்து சில ஓவர்கள் நிதானமாக ஆட பிறகு ஆட்டத்தில் ரன்களைச் சேர்க்கத் தொடங்கினர். குறிப்பாக, இங்கிலீஷ் அதிரடி காட்டத் தொடங்கினார். அவர் சிக்ஸரையும், பவுண்டரியையும் விளாச கேரி அவருக்கு நன்றாக ஒத்துழைப்பு தந்தார். இருவரும் அரைசதம் கடந்தனர். இந்த ஜோடியைப் பிரிக்க பட்லர் மார்க் வுட், ஆர்ச்சர், ப்ரைடன் கார்ஸ், ரஷீத், லிவிங்ஸ்டன், ரூட் என மாறி, மாறி பயன்படுத்தினார்.

சிக்ஸர் மழை பொழிந்த இங்கிலிஷ்:

இறுதியில் இலக்கை நெருங்கிய வேளையில் கேரி ஆட்டமிழந்தார். 63 பந்துகளில் 69 ரன்களை 8 பவுண்டரியுடன் எடுத்திருந்தார். அதன்பின்பு வந்த மேக்ஸ்வெல் பட்டாசாய் வெடித்தார். மறுமுனையில் இங்கிலிஷ் சதம் விளாசினார். இமாலய இலக்கை 47.3 ஓவர்களிலே அதாவது 15 பந்துகள் மீதம் வைத்து ஆஸ்திரேலியா எட்டியது.

மட்டமான பவுலிங்:

ஜோஷ் இங்கிலிஷ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 86 பந்துகளில் 8 பவுண்டரி 6 சிக்ஸருடன் 120 ரன்கள் எடுத்தார். மேக்ஸ்வெல் 15 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் 32 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சு மிகவும் மோசமாக அமைந்தது. அந்த அணியின் ப்ரைடன் கார்ஸ் 7 ஓவர்களில் 69 ரன்களை விட்டுக்கொடுத்தார். ஆர்ச்சர் 10 ஓவர்களில் 82 ரன்களையும், மார்க் வுட் 75 ரன்களை 9.3 ஓவர்களிலும் விட்டுக்கொடுத்தனர். ரஷீத் மட்டுமே 10 ஓவர்களில் 47 ரன்களை கொடுத்தார்.

அதிக ரன் சேஸ்:

இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்களை சேஸ் செய்த அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது.

Read Entire Article