Elon Musk: தனது நிறுவன ஊழியர் சிலிஸ் மூலம் 4வது குழந்தை; 14 குழந்தைக்குத் தந்தையானார் எலான் மஸ்க்

2 hours ago
ARTICLE AD BOX
எலான் மஸ்க் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஷிவோன் சிலிஸ் என்ற பெண் ஊழியருடன் நான்காவது குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார்.

53 வயதான எலான் மஸ்க், கடந்த 2021ம் ஆண்டு தனது 'நியூரோலிங்க்' நிறுவனத்தில் பணிபுரியும் ஷிவோன் சிலிஸ் என்ற பெண் ஊழியருடன் குழந்தையைப் பெற்றெடுத்தார். பிறகு, இவர்களுக்கு 2022ம் ஆண்டு இரட்டைக் குழந்தைகளைப் பிறந்தது. தற்போது இவர்கள் நான்காவது குழந்தையைப் பெற்றெடுத்திருக்கின்றனர்.

Discussed with Elon and, in light of beautiful Arcadia’s birthday, we felt it was better to also just share directly about our wonderful and incredible son Seldon Lycurgus. Built like a juggernaut, with a solid heart of gold. Love him so much ♥️

— Shivon Zilis (@shivon) February 28, 2025

இந்த மகிழ்ச்சியான செய்தியை ஷிவோன் சிலிஸ், "எங்களுக்கு அழகிய, அற்புதமான மகன் செல்டன் லைகர்கஸ் பிறந்திருக்கிறான். இந்த மகிழ்ச்சியான செய்தியை எலானிடம் சொல்லிவிட்டு, அவரது அனுமதியுடன் உங்கள் அனைவரிடமும் தெரிவிக்கிறேன். எங்களின் தங்க மகனை நான் மிகவும் விரும்புகிறேன்" என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஷிவோன் சிலிஸின் எக்ஸ் பதிவிற்குச் சிவப்பு இதய ஸ்டிக்கரை பதிவிட்டு அன்பைத் தெரிவித்திருக்கிறார் எலான். இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஏற்கெனவே அவருடைய முதல் மனைவியான கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஜஸ்டின் வில்சன் மூலம் ஆறு குழந்தைகள் மற்றும் கனடா பாடகி கிரிமிஸ் மூலம் மூன்று குழந்தைகள் என 9 குழந்தைகள் இருக்கின்றன. ஆஸ்லே செயிண்ட் உடன் ஒரு குழந்தை. இந்நிலையில் தற்போது தனது நிறுவன ஊழியர் சிலிஸ் மூலம் பெற்றெடுத்த இந்த நான்காவது குழந்தையையும் சேர்த்து மொத்தம் 14 குழந்தைகளுக்குத் தந்தையாகியுள்ளார் எலான் மஸ்க்.

Elon Musk: அதிபர் மாளிகையில் குதித்து விளையாடும் எலான் மஸ்க்கின் குழந்தைகள்; அரசை அவமதிக்கும் செயலா?

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.

Click here: https://bit.ly/VikatanWAChannel

Read Entire Article