Elon Musk : 14 குழந்தைகள்; எத்தனை மனைவிகள்? - மஸ்க் குடும்பம் பற்றி தெரியுமா?!

3 hours ago
ARTICLE AD BOX

எலான் மஸ்க் இன்றைய உலகில் மிகவும் கவனிக்கப்படும் மனிதர். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், நியூராலிங்க், எக்ஸ் எனப் பல நிறுவனங்களை நடத்திவரும் இவருக்கு 14 குழந்தைகள் உள்ளது பலருக்கும் ஆச்சரியம் அளிக்கலாம்.

கடந்த 2002 முதல் 2025 வரையிலான காலத்தில் இத்தனை குழந்தைகளுக்கு தந்தையாகியிருக்கிறார். சமீபத்தில் தனது நியூராலிங்க் நிறுவனத்தில் பணிபுரியும் ஷிவோன் சிலிஸ் என்ற பெண் ஊழியருடன் 14-வது குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார்.

அமெரிக்க அரசின் செயல்திறன் துறைக்கு தலைவராக இருக்கும் எலான் மஸ்கின் குழந்தைகள் பற்றி பார்க்கலாம்...

Elon Musk

நெவாடா அலெக்ஸாண்டர் மஸ்க்

எலான் மஸ்கின் முதல் குழந்தை நெவாடா அலெக்ஸாண்டர் மஸ்க், 2022ம் ஆண்டு அவரது முதல் மனைவி ஜஸ்டின் வில்சன் உடன் பிறந்தது. இந்த குழந்தை பிறந்த 10வது வாரத்தில் SIDS பாதிப்பில் மரணமடைந்தது.

க்ரிஃபின் மற்றும் விவியன்

முதல் குழந்தை இறப்பால் பாதிப்படைந்திருந்த மஸ்க் மற்றும் ஜஸ்டின் ஐ.வி.எஃப் சிகிச்சை உதவியுடன் ஏப்ரல் 2004ல் க்ரிஃப் மற்றும் சேவியர் என்ற இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். 2022ம் ஆண்டு சேவியர் மஸ்க், திருநங்கையான சேவியர் எலான் மஸ்கின் பெயரைத் துறந்து, தனது அம்மாவின் பெயரை பின்னொட்டாக ஏற்றுக்கொண்டார். அத்துடன் தனது பெயரையும் விவியன் ஜென்னா என மாற்றிக்கொண்டார். மேலும் அவர், எலான் மஸ்க்குடன் எந்த வகையிலும் இணைந்திருக்க விரும்பவில்லை என்றும் அறிவித்துள்ளார்.

கை, சக்ஸான், டாமியான்

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஐ.வி.எஃப் உதவியுடன் எலானும் ஜஸ்டினும் Kai, Saxon, Damian என்ற மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். 2008ல் இவர்கள் விவாகரத்து பெறும் வரை இருவரும் இணைந்து குழந்தைகளை வளர்த்தனர்

X Æ A-12

எலான் மஸ்கின் இரண்டாவது திருமணமும் தோல்வியடைந்த பிறகு 2020ல் அவர் காதலித்த இசைக்கலைஞர் கிளேர் பவுச்சரை (க்ரிம்ஸ் என அழைக்கப்படுவார்) திருமணம் செய்துகொண்டார். 2020 மே மாதம் அவர்களுக்கு மகன் பிறந்தான். அவனுக்கு X Æ A-12 எனப் பெயர் வைத்தது உலகம் முழுவதும் பேசப்பட்டது. எனினும் கலிஃபோர்னியா பெயர் சட்டங்களினால், X AE A-Xii Musk என மாற்றினர். இப்போது X என சுருக்கமாக அழைக்கின்றனர்.

elon musk and grimes

எக்ஸா டார்க் சைடரெல் மஸ்க்

2021ல் டிசம்பரில் மஸ்க் மற்றும் க்ரிம்ஸ் தம்பதியின் இரண்டாவது குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு Exa Dark Sideræl Musk எனப் பெயரிட்டுள்ளனர். இந்த குழந்தையின் பிறப்பு மார்ச் 2022 வரை ரகசியமாக பாதுகாக்கப்பட்டது.

ஸ்ட்ரைடர் மற்றும் அசூர்

க்ரிம்ஸ் உடன் எக்ஸா பிறக்கும் அதே நேரத்தில் எலான் மஸ்க் ஷிவோன் சிலிஸ் உடன் இரட்டைக் குழந்தைகளுக்கு தந்தையானார். இவர் நியூராலிங்க் நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்த பெண்மணி. நவம்பர் 2021ல் ஸ்ட்ரைடர் மற்றும் அசூர் பிறந்தனர். இந்த இரட்டையர்கள் பிறந்தது ஜூலை 2022ல் வெளியில் தெரிந்தது.

டெக்னோ மகானிகஸ் மஸ்க்

செப்டம்பர் 2023ல் மஸ்க் மற்றும் க்ரிம்ஸ் மூன்றாவது குழந்தையை உலகுக்கு வரவேற்றனர். Techno Machanicus Musk எனப் பெயரிட்டுள்ள இந்த மகனை செல்லமாக Tau என்று அழைக்கின்றனர். இந்த குழந்தையின் பிறப்பும் நீண்ட நாட்களுக்கு ரகசியமாக இருந்தது. எலான் மஸ்கின் வாழ்க்கை வரலாற்றை வால்டர் ஐசக்சன் வெளியிட்ட பிறகுதான் உலகத்தாருக்கு தெரியவந்துள்ளது.

எலான் மஸ்க்

அர்காடியா மஸ்க்

2024 தொடக்கத்தில் மஸ்க் - ஷிவோன் சிலிஸ் இணைக்கு அர்காடியா என்ற குழந்தை பிறந்தது. இந்த குழந்தை பிறப்பும் ரகசியமாக வைக்கப்பட்டதாக கேள்வி எழுப்பப்பட்டபோது, மறுத்த எலான் மஸ்க் எங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு முன்னரே தெரியும் என விளக்கினார்.

ஆர்.எஸ்.சி மஸ்க்

பிப்ரவரி 2025ல் பழமைவாத எழுத்தாளர் ஆஷ்லே கிளேர் எக்ஸ் தளத்தில் அவருக்கும் எலான் மஸ்குக்கும் சில மாதங்களுக்கு முன்பு குழந்தை பிறந்ததாக அறிவித்தார்.

செல்டன் லைகர்கஸ்

மிக சமீபத்தில் சிலிஸ் மற்றும் எலான் மஸ்குக்கு மகன் பிறந்துள்ளார். அவருக்கு Seldon Lycurgus எனப் பெயர் வைத்துள்ளனர். இந்த குழந்தையும் எப்போது பிறந்தது என்ற தகவல்கள் வெளியாகவில்லை.

Elon Musk பிறப்பு விகிதம் குறைவது மனித நாகரிகத்துக்கு ஆபத்து என்றே கருதுகிறார். பெரிய குடும்பங்கள் இருக்க வேண்டுமென வெளிப்படையாக பேசியுள்ளார். அரசின் செயல்திறன் துறைக்கும் பல நிறுவனங்களுக்கும் தலைமை தாங்கினாலும் குழந்தைகளை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றுவதாகவும் தெரிவித்துள்ளார். எனினும் எலான் மஸ்கின் குழந்தை வளர்ப்பு விமர்சனங்களுக்கும் உட்பட்டிருக்கிறது. குறிப்பாக எலான் மஸ்க் அவரது மகள் விவியனுடனான உறவு மோசமனதாக உள்ளது.

Elon Musk: 26 ஆண்டுகள் முன்பு ஆரூடம் சொன்ன எலான் மஸ்க்... அப்படியே பலித்தது - அன்றே கணித்தது என்ன?
Read Entire Article