Dragon BO: 100 கோடி கிளப்பில் இணைந்த டிராகன்.. அர்ச்சனா கல்பாத்தி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

17 hours ago
ARTICLE AD BOX

Dragon BO: 100 கோடி கிளப்பில் இணைந்த டிராகன்.. அர்ச்சனா கல்பாத்தி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

News
oi-Mari S
By
| Published: Sunday, March 2, 2025, 22:36 [IST]

சென்னை: பிப்ரவரி மாதம் வறட்சியான மாதம் என அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் பெரிதாக வசூல் வேட்டை செய்ய முடியாமல் திணறியதும் அஜித் ரசிகர்கள் முட்டுக் கொடுத்து வந்தனர். ஆனால், அதன் பின்னர் 2 வாரங்கள் கழித்து வெளியான பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படம் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக அர்ச்சனா கல்பாத்தி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஏஜிஎஸ் தயாரிப்பில் கடந்த ஆண்டு வெளியான தளபதி விஜய்யின் கோட் திரைப்படம் 455 கோடி வசூல் ஈட்டியது. இந்நிலையில், இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே பிரதீப் ரங்கநாதன் படம் அந்த நிறுவனத்துக்கு அடுத்த பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்துள்ளது.

Dragon Dragon box office pradeep ranganathan

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன், மிஷ்கின், கே.எஸ். ரவிகுமார், கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் தியேட்டர்களில் ரசிகர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து வெற்றியை ருசித்தது.

100 கோடி வசூல்: லவ் டுடே படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த டிராகன் படமும் 100 கோடி வசூல் செய்து மெகா பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றுள்ளது. 100 கோடி வசூலை டிராகன் ஈட்டியதாக அர்ச்சனா கல்பாத்தி அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது எக்ஸ் தள பக்கத்தில் தற்போது வெளியிட்டு ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளார்.

Dragon Dragon box office pradeep ranganathan

அடுத்த சிவகார்த்திகேயன்: டாக்டர், டான் என அடுத்தடுத்து சிவகார்த்திகேயன் 100 கோடி வசூல் படங்களை கொடுத்து அமரன் படத்தின் மூலம் 300 கோடிக்கும் அதிகமான வசூல் படத்தை கொடுத்த நிலையில், அதே போல கோலிவுட்டுக்கு இன்னொருவர் கிடைத்துவிட்டார் என பிரதீப் ரங்கநாதனை ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.

சம்பளத்தை ஏத்தப்போறாரு: டிராகன் படத்துக்கே பிரதீப் ரங்கநாதன் சம்பளம் 17 கோடியாக உயர்ந்த நிலையில், அடுத்த படத்துக்கு நிச்சயம் 25 முதல் 30 கோடி ரூபாய் சம்பளத்தை உயர்த்தி விடுவார் பிரதீப் ரங்கநாதன் என்கின்றனர். விடாமுயற்சி படத்தின் வசூலை அடுத்த வாரம் இந்த டிராகன் படம் முறியடிக்குமா என்கிற கேள்விகளும் கோலிவுட்டில் எழுந்துள்ளன. மார்ச் மாதம் பெரிய படங்கள் ஏதும் இல்லாத நிலையில், டிராகன் படம் வசூல் ஈட்ட அதிக வாய்ப்புகள் உள்ளன.

Dragon Dragon box office pradeep ranganathan

More From FilmiBeat

கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Pradeep Ranganathan Dragon movie officially joins 100 Crore Club: பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் 100 கோடி வசூலை 2 வாரத்தில் கடந்துவிட்டது.
Read Entire Article