Dhoni: 'அனிமல்' ரன்பீர் கபூராக தோனி... வைரலாகும் சந்தீப் ரெட்டி வாங்காவுடனான தோனியின் விளம்பரம்!

4 hours ago
ARTICLE AD BOX

ரிஷப் பண்ட்டின் சகோதரி நிச்சயதார்த்த விழா, ஐ.பி.எல் பயிற்சி, விளம்பரங்கள் என இப்போது எங்கும் தோனிதான் இருக்கிறார். தற்சமயம் ஐ.பி.எல் போட்டிக்கான பயிற்சியில் பரபரப்பாக ஈடுபட்டு வருகிறார் தோனி. இதற்கிடையில் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்காவும் தோனியும் இணைந்து நடித்திருக்கும் ஒரு விளம்பரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

'அனிமல்' படத்தின் காட்சியை ரீ கிரியேட் செய்யும் வகையில் இந்த விளம்பரத்தை எடுத்திருக்கிறார்கள். அனிமல் படத்தின் ரன்பீர் கபூர் தோற்றத்திலேயே இந்த விளம்பரத்தில் தோனி நடித்திருக்கிறார்.

Dhoni - Sandeep Reddy Vanga
Sunita Williams: பூமிக்கு திரும்பிய வீரர்களை வரவேற்ற டால்பின்கள்; இணையத்தில் வைரலாகும் வீடியோ

படத்தில் ரன்பீர் கபூர் வைத்திருந்ததைப் போலவே லாங் ஹேர் வைத்து படத்தில் வரும் அந்த ஐகானிக் நடையையும் தோனி இந்த விளம்பரத்தில் ரீ க்ரியேட் செய்திருக்கிறார். தோனியை இயக்குவது போல இந்த விளம்பரத்தில் சந்தீப் ரெட்டி வாங்காவும் நடித்து கவனம் ஈர்த்திருக்கிறார். அனிமல் படத்தின் வெற்றிக்குப் பிறகு சந்தீப் ரெட்டி வாங்கா பிரபாஸை கதாநாயகனாக வைத்து ̀ஸ்பிர்ட்' படத்தை இயக்கவிருக்கிறார். இதனைத் தாண்டி அனிமல் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான அனிமல் பார்க் திரைப்படமும் இவருடைய லைன் அப்பில் இருக்கிறது.

Dhoni: "எப்போதும் தோனியுடன் இருக்க விரும்புகிறேன்..." - நெகிழும் சஞ்சு சாம்சன்

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

Read Entire Article