ARTICLE AD BOX
இந்தியன் பிரீமியர் லீக்கின் 18-வது சீசன் மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் இரு ஆட்டங்களில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுடன் சேப்பாக்கத்தில் மோதுகிறது. சேப்பாக்கத்தில்தான் தனது கடைசி ஐ.பி.எல் போட்டி என முன்பே தோனி குறிப்பிட்டதற்கு ஏற்றவாறு கடந்த சீசனனில் வாய்ப்பு அமைந்தது. தோனியும், கிரிக்கெட்டில் தான் அறிமுகமானபோது இருந்த தோற்றத்துடன், நீண்ட முடியுடன் களமிறங்கினார்.

ஆனால், சென்னை அணியினால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாததால், சேப்பாக்கத்தில் நடைபெற்ற பைனலில் விளையாட முடியாமல் போனது. தோனியும் இனி ஐ.பி.எல் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐ.பி.எல் மெகா ஏலத்துக்கு முன்பாக, இன்னும் சில ஆண்டுகள் விளையாட விரும்புவதாகக் கூறி, 2025 ஐ.பி.எல்லில் தான் விளையாடுவதை உறுதிசெய்தார் தோனி. இவ்வாறிருக்க, ஐ.பி.எல் தொடங்குவதற்கு இன்னும் மூன்று வாரங்களே இருக்கும் நிலையில் தோனி இன்று சென்னை வந்திறங்கினார்.
Morse Code-ல் ‘One Last Time’ என்ற வாசகம் பொறித்த டி-ஷர்ட்டுடன் சென்னை வந்து இறங்கினார் எம்.எஸ்.தோனி.#MSDhoni | #ChennaiSuperKings | #IPL2025 | #OneLastTime pic.twitter.com/R7i0nLLsoM
— Sports Vikatan (@sportsvikatan) February 26, 2025சென்னை அணி நிர்வாகமும், விமான நிலையத்திலிருந்து தோனி வெளியே வரும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறது. இந்த நிலையில், அந்தப் புகைப்படத்தில் தோனி அணிந்திருக்கும் டி-ஷர்ட்டில் அச்சிடப்படப்பட்டிருக்கும் கோட் வேர்ட் (Morse Code)அனைவரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
அதற்குக் காரணம், `கடைசியாக ஒருமுறை (One Last Time)' என்பதைத் தான் அந்த கோட் வேர்ட் குறிக்கிறது. இதனால், தனது கடைசி ஐ.பி.எல் சீசன் இதுதான் என்று தோனி சொல்கிறாரா இல்லை, வெறுமனே விளம்பரத்துக்காக அப்படி போட்டிருக்கிறாரா என்று சமுக வலைத்தளங்களில் ரசிகர்கள் மத்தியில் விவாதங்கள் ஆரம்பித்திருக்கின்றன.
Morse Code
மோர்ஸ் குறியீடு என்பது, புள்ளிகள் மற்றும் கோடுகளின் தொடர்ச்சியாக எழுத்துக்கள் மற்றும் எண்களை குறிக்கும் ஒரு தந்திக்குறியீடு. இது, டிட்ஸ் மற்றும் டாஸ் என்றும் அழைக்கப்படுகிறது.
Dhoni : ``பட்டர் சிக்கனும் பட்டர் பனீரும் ஒன்றல்ல..." - வைரலாகும் தோனியின் ஃபேவரைட் டிஷ் வீடியோVikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
