ARTICLE AD BOX
Dhanush: கனவுகளோட காத்திருக்காங்க.. Neek படம் குறித்து தனுஷ் உற்சாக பதிவு!
சென்னை நடிகர் தனுஷ் துள்ளுவதோ இளமை படம் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர். பல ஆண்டுகளாக தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார். நடிப்பில் மட்டுமில்லாமல் இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என சினிமாவில் பன்முகம் காட்டி வரும் தனுஷ், தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த ஆண்டிலேயே அவரது அடுத்தடுத்த படங்கள் ரிலீசாக உள்ளது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில் நாளைய தினம் தனுஷ் இயக்கம், நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் ரிலீசாகவுள்ளது. முற்றிலும் இளைஞர்களை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளார் தனுஷ்.

நடிகர் தனுஷ்: தனுஷின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். தனுஷே இந்த படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார். அவரது வொண்டர் பார் நிறுவனம் NEEK படத்தை தயாரித்துள்ளது/ கடந்த ஆண்டில் தனுஷின்,இயக்கத்தில் ராயன் படம் வெளியாகி சிறப்பான வரவேற்பையும் வசூலையும் குவித்திருந்தது. படம் 100 கோடி கிளப்பில் இணைந்திருந்த நிலையில் அடுத்தடுத்த படங்களை இயக்கும் திட்டத்தில் தனுஷ் உள்ளார். நாளைய தினம் அவரது இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் ரிலீசாகவுள்ள நிலையில் அடுத்ததாக இட்லி கடை என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.
இளைஞர்கள் கூட்டணி: இட்லி கடை படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.. படத்தில் நித்யா மேனன் தனுஷுடன் ஜோடி சேர்ந்துள்ளார். முன்னதாக இந்த ஜோடி திருச்சிற்றம்பலம் படத்தில் இணைந்து மாஸ் காட்டிய நிலையில் தற்போது மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளது. இட்லி கடை படம் கிராமத்து கதைக்களத்தில் உருவாக்கியுள்ளது. இதனிடையே முற்றிலும் இளைஞர்கள் இணைந்துள்ள நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை கடந்து சில ஆண்டுகளுக்கு முன்னதாகவே தனுஷ் உருவாக்கியதாகவும் தற்போது இந்த படம் ரசிகர்கள் கொண்டாட தயாராகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தனுஷ் உற்சாகம்: இந்தப் படத்தில் தனுஷுடன் சரத்குமார் லீட் கேரக்டரில் நடித்துள்ளார். இவர்களுடன் தனுஷின் அக்கா மகன் பவிஷ், அனிகா சுரேந்திரன் உள்ளிட்ட பல இளம் நடிகர்கள் இணைந்துள்ளனர். நாளைய தினம் படம் ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த பாடல்கள், ட்ரெய்லர் உள்ளிட்டவை வெளியாகி மிக சிறப்பான வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் படத்திற்கு கொடுத்துள்ளது இந்நிலையில் நடிகர் தனுஷ் இந்தப்படம் குறித்து தன்னுடைய ரசிகர்களிடையே வீடியோ மூலம் பேசியுள்ளார். தனது இயக்கத்தில் ராயன் படத்தை தொடர்ந்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் ரிலீசாகவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இளம் நடிகர்கள் கனவு: இந்தப்படத்தை இயக்கும்போது எந்த அளவிற்கு உற்சாகத்தை கொடுத்ததோ அதேபோல ரசிகர்களுக்கும் மிகப்பெரிய உற்சாகத்தை கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் நடித்துள்ள இளம் நடிகர்கள் அனைவரும் படத்தின் வெற்றியை எதிர்நோக்கி கண்களில் கனவுகளுடன் காத்திருப்பதாகவும் தனுஷ் சுட்டிக் காட்டியுள்ளார். அவர்களின் கனவுகள் நிறைவேற தான் கடவுளிடம் வேண்டிக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர்களின் இடத்தில் தானும் ஒரு காலத்தில் இருந்ததாக கூறியுள்ள தனுஷ், அவர்களின் வெற்றிக்கு வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளார்.