Delhi: சிவராத்திரியில் அசைவம் பரிமாறியதாக தகராறு; பெண்கள் மீது தாக்குதல் - SFI, ABVP சொல்வதென்ன?

3 hours ago
ARTICLE AD BOX

நேற்றைய தினம் (26.02.2025 - புதன் கிழமை) தெற்கு டெல்லியில் உள்ள தெற்கு ஆசிய பல்கலைக்கழகத்தில் அசைவ உணவு பரிமாறப்பட்டதால் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

மகா சிவராத்திரி தினத்தில் பல்கலைக்கழக உணவகத்தில் அசைவ உணவருந்தியதற்காக மாணவர்களை ஏ.பி.வி.பி அமைப்பினர் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து டெல்லி காவல் நிலையம் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் தரப்பில் எதுவும் கூறப்படவில்லை. டெல்லி இந்திய மாணவர் சங்கம் (SFI) சார்பாக இது குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, ஏ.பி.வி.பி அமைப்பினர் சொன்னபடி மகா சிவராத்திரி இரவில் அசைவ உணவு பரிமாறுவதை நிறுத்தாததால் உணவு விடுதியில் மாணவர்களைத் தாக்கியுள்ளனர்.

On the alleged incident, Students' Federation of India says, "ABVP viciously attacked the students of South Asian University in the university mess because they were not complying with ABVP's draconian and undemocratic demand that no non-veg should be served in the university… pic.twitter.com/8kwOSAkGlE

— ANI (@ANI) February 26, 2025

பெண்கள் உட்பட, மாணவர்களையும் உணவக பணியாளர்களையும் தாக்கியுள்ளனர். இதனால் மாணவர் சங்கத்தினர் உடனடியாக பல்கலைக்கழக நிர்வாகம் அகில பாரதிய வித்தியார்த்தி பரிசத் அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்திய மாணவர் சங்கத்தின் தகவல்களை ஏ.பி.வி.பி-யினர் மறுத்துள்ளனர். மகாசிவராத்திரியில் விரதம் இருந்த மாணவர்களுக்கான உணவகத்தில் SFI-யினர் வலுக்கட்டாயமாக அசைவ உணவை பரிமாற முயன்றதாக அவர்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இந்திய மாணவர் சங்கத்தினரின் நடவடிக்கை மத சுதந்திரத்தையும் நல்லிணக்கத்தையும் குழைக்கும் முயற்சி என ஏ.பி.வி.பி குற்றம்சாட்டியுள்ளது. இந்த விவகாரத்தில் நடுநிலையான விசாரணை தேவை எனக் கோரியுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில் உணவகத்தில் வன்முறை நடந்ததைக் காண முடிகிறது. ஏ.பி.வி.பி-யினர் பெண்களைத் தாக்கும் வீடியோ எஸ்.எஃப்.ஐ சார்பாக வெளியிடப்பட்டது.

ABVP attacks women students in SAU!

Showing their cowardice, anti-women attitude and sheer hooliganism ABVP attacked women students in SAU. We condemn the ABVP's actions in the most fierce terms and extend solidarity to the courageous students of SAU.#sfi #sfidelhi #sau pic.twitter.com/mWH5VIs846

— SFI Delhi (@SfiDelhi) February 26, 2025
டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசல் விவகாரம்: "வீடியோக்களை நீக்குக" - எக்ஸ் தளத்துக்கு ரயில்வே நோட்டீஸ்
Read Entire Article