Delhi CM: மூத்த தலைவர்களை ஓரங்கட்டி விட்டு, ரேகா குப்தா டெல்லி முதல்வரானது எப்படி?

4 days ago
ARTICLE AD BOX

டெல்லி சட்டமன்ற தேர்தல்

டெல்லியில் நடந்த சட்டமன்ற தேர்தல் தேர்தலில் 27 ஆண்டுகளுக்கு பிறகு பா.ஜ.க 48 தொகுதியில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருக்கிறது. தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து டெல்லியின் புதிய முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்தது. பா.ஜ.கவின் மூத்த தலைவர்கள் பலர் இப்பதவிக்கு போட்டி போட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் முதல்வரை தேர்வு செய்வதில் எப்போதுமே பா.ஜ.க அனைவருக்கும் ஆச்சரியம் கொடுக்கும் வகையில்தான் செயல்படும். டெல்லி விவகாரத்திலும் அதுதான் நடந்தது.

பர்வேஷ் வர்மாபர்வேஷ் வர்மா
டெல்லிக்கு மீண்டும் பெண் முதல்வர்: முதல்முறையாக வெற்றி பெற்ற ரேகா குப்தா நாளை முதல்வராக பதவியேற்பு!

ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவாலை சட்டமன்ற தேர்தலில் தோற்கடித்த பர்வேஷ் வர்மா தான் புதிய முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக டெல்லி முன்னாள் கவுன்சிலர் ரேகா குப்தாவை கட்சி தலைமை புதிய முதல்வராக தேர்வு செய்துள்ளது.

இத்தேர்வு முடிவு கட்சியில் முதல்வர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த பர்வேஸ் வர்மாவுக்கு அதிர்ச்சியை கொடுத்தாலும், கட்சியின் முடிவை அமைதியுடன் ஏற்றுக்கொள்வதை தவிர வேறு வழியில்லை.

ரேகா குப்தா யார்?

டெல்லி பா.ஜ.க செயலாளர் ஆசிஷ் சூட், டெல்லி முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் விரேந்தர் குப்தா, சதீஷ் உபாத்யா, ஜிதேந்திர மகாஜன் போன்றோரும் முதல்வர் பதவிக்கு போட்டியில் இருந்தனர். இரண்டு முறை போராடி தோற்றுவிட்டு மூன்றாவது முறை போட்டியிட்டு 30 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ரேகா குப்தா டெல்லியில் மூன்று முறை கவுன்சிலராக இருந்துள்ளார்.

மாணவர் சங்க தலைவராக ரேகா
`ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்' - டெல்லி தேர்தலில் அர்விந்த் கெஜ்ரிவாலை கவிழ்த்த மதுபானக் கொள்கை!

புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரேகா குப்தா ஹரியானாவை பூர்வீகமாக கொண்டவர். அவர் தனது 2 வயதில் டெல்லிக்கு தனது பெற்றோருடன் குடிபெயர்ந்துவிட்டார். கல்லூரியில் படிக்கும் போதே ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். அப்போதே டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றிய ரேகா குப்தா 2000ம் ஆண்டுதான் அரசியலுக்குள் நுழைந்தார். டெல்லி பா.ஜ.க முன்னாள் செயலாளரான ரேகா குப்தா இப்போது பா.ஜ.க மகிளா மோர்ச்சாவின் தேசிய துணைத்தலைவராக இருக்கிறார். 2007-ம் ஆண்டு முதல் முறையாக டெல்லி கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு டெல்லி மேயராகவும் பணியாற்றிய ரேகா கடந்த 2022-ம் ஆண்டு மேயர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

ரேகா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டது எப்படி?

ரேகா குப்தா மூன்று முறை கவுன்சிலராக இருந்தாலும், தனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. டெல்லியில் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ரேகா குப்தா முதல்வரானதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. டெல்லியில் அடுத்தடுத்து பெண்கள்தான் முதல்வராக வந்து கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் பா.ஜ.க ரேகாவை முதல்வராக தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதோடு அரசியலில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்திலும் ரேகா தேர்வு செய்யப்பட்டு இருக்கலாம். டெல்லி சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க சார்பாக 4 பெண்கள் வெற்றி பெற்று இருக்கின்றனர். அவர்களில் மிகவும் அனுபவசாலி ரேகா குப்தா மட்டும்தான். அதோடு ரேகா குப்தா 30 ஆண்டுகளாக கட்சியில் அடிமட்ட தொண்டரிலிருந்து தொடங்கி படிப்படியாக முன்னேறி வந்திருக்கிறார்.

மேலும் டெல்லி பா.ஜ.க தலைவர் பர்வேஸ் வர்மா, ரமேஷ் பிதுரி போன்று ரேகா குப்தா எந்த வித சர்ச்சையிலும் சிக்காதவர். டெல்லியில் புதிய அத்தியாயத்தை தொடங்கவேண்டும் என்ற நோக்கத்தில் பா.ஜ.க புதுமுகமான ரேகாவை முதல்வராக தேர்வு செய்துள்ளதாக பார்க்கப்படுகிறது. ரேகா தனது தேர்தல் பிரசாரத்தில் 'எனது வேலைவே எனது அடையாளம்' என்ற முழக்கத்துடன் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றுள்ளார். டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் வாக்களித்துள்ளனர். பெண்களுக்கு மாதம் ரூ.2500 கொடுப்பதாக பா.ஜ.க வாக்குறுதி கொடுத்திருக்கிறது.

முதல்வராக பதவியேற்கும் ரேகா குப்தா இது குறித்து அளித்த பேட்டியில்,'' 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சிக்கு வந்துள்ள பா.ஜ.க எனக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுத்திருகிறது. இது நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு கிடைத்த பெருமையாகும். டெல்லி மக்களுக்கு பா.ஜ.க கொடுத்த ஒவ்வொரு வாக்குறுதியையும் நிறைவேற்றுவதுதான் எனது வாழ்நாள் குறிக்கோளாகும்'' என்றார்.

Read Entire Article