CUET UG 2025: என்னது, க்யூட் தேர்வில் இத்தனை மாற்றங்களா? மாணவர்களே மறக்காதீங்க- முழு விவரம்!

1 day ago
ARTICLE AD BOX

க்யூட் எனப்படும் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வில் பல்வேறு மாற்றங்களை தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டு முதல் இந்த மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. இதன்படி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என கலப்பு முறையில் இந்த க்யூட் தேர்வு, இனி கணினி வழியில் மட்டுமே நடைபெற உள்ளது.

2025 க்யூட் தேர்வில் என்னென்ன மாற்றங்கள்? (Key changes in CUET UG 2025)

கணினி வழியிலான தேர்வு முறை (Computer Based Test -CBT Format)

இந்த ஆண்டில் இருந்து கணினி வழியில் மட்டுமே தேர்வு நடக்கும். முந்தைய ஆண்டுகளைப் போல கலப்பு முறையில், தேர்வு நடக்காது.

பாடத் தேர்வு முறையில் நெகிழ்வுத் தன்மை (Flexible Subject Choices)

12ஆம் வகுப்பில் எந்தப் பாடப் பிரிவைத் தேர்வு செய்து படித்தாலும் தேர்வர்கள், அதற்குத் தொடர்பில்லாத பாடப் பிரிவுகளையும் தேர்வு செய்து எழுதலாம்.

பாடங்களின் எண்ணிக்கை குறைவு

மொத்த பாடங்களின் எண்ணிக்கை 63-ல் இருந்து 37ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. படித்து முடிக்காத பாடங்களுக்கான (discontinued subjects) மாணவர் சேர்க்கை, பொது திறனறிவுத் தேர்வு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.

மொழித் தாள் ஒருங்கிணைப்பு (Language Paper Consolidation)

33 மொழிகளுக்குத் தனித்தனியாகத் தேர்வு நடத்துவதற்கு பதிலாக, 13 மொழிகளுக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட உள்ளது. குறிப்பாக,  அஸ்ஸாமி, பெங்காலி, ஆங்கிலம், குஜராத்தி, இந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி, ஒடியா, தமிழ், தெலுங்கு மற்றும் உருது மொழிகளுக்கு மட்டுமே தேர்வு நடைபெற உள்ளது.

துறை சார் பாடங்கள் குறைப்பு (Domain Specific Subject Reduction)

துறைசார் பாடங்களின் எண்ணிக்கை 29-ல் இருந்து 23 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக,  தொழில்முனைவு, கற்பித்தல் திறன், ஃபேஷன் ஆய்வுகள், சுற்றுலா, சட்ட ஆய்வுகள் மற்றும் பொறியியல் கிராபிக்ஸ் பாடப் பிரிவுகள் நீக்கப்பட்டுள்ளன.

தேர்வு நேரம்

அனைத்து பாடத் தாள்களும் இனி தலா 60 நிமிட அவகாசத்தைக் கொண்டிருக்கும். அனைத்துக் கேள்விகளுக்கும் கட்டாயம் பதில் எழுத வேண்டும். இந்த முறை விருப்பக் கேள்விகள் நீக்கப்பட்டு, அனைத்து கேள்விகளும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

கடந்த 2024ஆம் ஆண்டுக்கான க்யூட் இளங்கலைத் தேர்வு, மே 15 முதல் 31ஆம் தேதி வரை பல்வேறு ஷிஃப்ட்டுகளில், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் விவரங்களுக்கு: cuet.nta.nic.in

Read Entire Article