CT 2025: பாகிஸ்தான் அணியின் அதிரடி வீரர் விலகல்.. மாற்றுவீரர் இந்திய போட்டிக்கு முன் அறிவிப்பு

4 days ago
ARTICLE AD BOX

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன்  பாகிஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஒன்று ஏற்பட்டிருக்கிறது. ஏற்கனவே அந்த அணியில் சையும் அயூப் இல்லாதது பெரிய மைனஸ் ஆக இருந்தது. அவருக்கு பதில் அனுபவ வீரர் பகார் சமான் பாகிஸ்தான் அணியில் தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் ஆட்டத்தின் இரண்டாவது பந்தில் பகார் சமான் பில்டிங் செய்த போது அவருடைய முட்டிக்காலில் படுகாயம் ஏற்பட்டது. இதனால் போட்டியிலிருந்து பாதியில் விலகிய பகார் சமான் அதன் பிறகு பில்டிங் செய்ய வரவே இல்லை.

பகார் சமான் விலகல்:

இந்த சூழலில் பேட்டிங்கின் போதும் பகார் சமான், நம்பர் நான்காவது வீரராக வேறு வழியின்றி களமிறங்கினார். 41 பந்துகளை எதிர்கொண்ட அவர் வெறும் 24 ரன்கள் தான் சேர்த்தார். இந்த நிலையில் பகார் சமான் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை விட்டு விலகி இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

பகார் சமானுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் அவர் அடுத்த சில போட்டிகளில் விளையாடாமல் ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குறிப்பிட்டு இருக்கிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பகார் சமான், பாகிஸ்தான் அணிக்காக மிகப்பெரிய தொடரில் இடம் பெற்றது எனக்கு பெருமை தான்.

மாற்று வீரர் அறிவிப்பு:

ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கனவும் இதுவாக தான் இருக்கும். இந்த கனவை நான் பலமுறை எனக்கு நினைவாகி இருக்கிறது. பாகிஸ்தான் அணிக்காக பல தொடர்களில் நான் விளையாடி விட்டேன். ஆனால் இம்முறை ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் என்னால் தொடர முடியவில்லை.

இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு எனக்கு மகிழ்ச்சி. இனி நான் வீட்டில் அமர்ந்து கொண்டு நமது அணி வீரர்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பேன். இந்த சரிவிலிருந்து நான் மீண்டும் திரும்பி பாகிஸ்தான் அணியில் இடம் பெறுவேன் என பகார் சமான் கூறியிருந்தார்.

இந்த சூழலில் இந்தியாவுக்கு எதிராக பகார் சமான் மட்டும் தான் அதிக சராசரி வைத்திருக்கும் வீரராக இருந்தார்.  தற்போது இருக்கும் பாகிஸ்தான் அணியில் பகார் சமான் இந்தியாவுக்கு எதிராக 40 என்று அளவில் சராசரியை வைத்திருந்தார்.

இதையும் படிங்க- IND vs BAN: ரோகித் சர்மா செய்த மெகா சொதப்பல்.. அக்சர் பட்டேலிடம் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்பு.. என்ன நடந்தது?

பகார் சமான் அபாயகரமான வீரராக இருப்பார் என ஹர்பஜன் சிங் கூட எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் அவர் இல்லாதது பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவாக ஏற்பட்டிருக்கிறது.இந்த சூழலில் பகார் சமானுக்கு மாற்று வீரராக இமாமுல் ஹக் அறிவிக்கப்பட்டிருக்கிறார். பாகிஸ்தான் அணிக்காக 72 ஒரு நாள் போட்டிகளில் இமாமுல் விளையாடி இருக்கிறார்.

The post CT 2025: பாகிஸ்தான் அணியின் அதிரடி வீரர் விலகல்.. மாற்றுவீரர் இந்திய போட்டிக்கு முன் அறிவிப்பு appeared first on SwagsportsTamil.

Read Entire Article