ARTICLE AD BOX
சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி வெறும் ஆறு நாட்கள் தான் முடிவடைந்து இருக்கிறது. அதற்குள் அரை இறுதிச்சுற்றில் மோத போகும் இரண்டு அணிகள் என்ன என்று தெரிந்து விட்டது. மினி உலகக் கோப்பை நாக் அவுட் கோப்பை என ரசிகர்களால் சாம்பியன்ஸ் டிராபி தொடர் அழைக்கப்படும்.
இதற்கு காரணம் இந்தத் தொடர் டாப் 8 அணிகள் மோதும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. குரூப் சுற்றில் ஒவ்வொரு அணியும் மூன்று போட்டிகள் தான் விளையாடும் இதில் ஒரு தோல்வியை தழுவினால் கூட அரை இறுதி வாய்ப்பு பெருமளவு பாதிக்கப்படும்.
விறுவிறுப்பாக மாறிய அட்டவணை:
இதுகுறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்த அவர், இந்திய அணி நட்சத்திர வீரர் விராட் கோலி தமக்கு சாம்பியன் டிராபி தொடர் மிகவும் பிடிக்கும் என்றும் ஒரு தவறு செய்தாலே இந்த தொடரில் இருந்து நாம் வெளியேறக் கூடும். டி20 உலக கோப்பை தொடர் எவ்வாறு விறுவிறுப்பாக இருக்குமோ அதை 50 ஓவரில் நாம் அனுபவிக்கும் தொடர் தான் சாம்பியன்ஸ் டிராபி என கூறியிருந்தார்.
அந்த வகையில் தான் போட்டியை நடத்திய பாகிஸ்தான் அணி தாங்கள் எதிர்கொண்ட நியூசிலாந்து மற்றும் இந்தியாவுக்கு எதிராக தோல்வியை தழுவி தொடரை விட்டு வெளியேறி இருக்கிறது. இதேபோன்று வங்கதேச அணியும் இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியை தழுவி அவர்கள் வெளியேறி விட்டார்கள். இதனால் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணி அரை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது.
அரையிறுதியில் யாருடன் மோதும்:
இந்த நிலையில் நியூசிலாந்து அணி நான்கு புள்ளிகள் மற்றும் 0.86 ரன் ரேட் உடன் முதல் இடத்தில் இருக்கிறது .இந்திய அணி 4 புள்ளிகளுடன் 0.64 ரன் ரேட் உடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த இரு அணிகளும் தங்களுடைய கடைசி லீக் ஆட்டத்தில் மார்ச் இரண்டாம் தேதி எதிர்கொள்கிறது. இதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் முதலிடத்தை பிடிப்பார்கள்.
குரூப் பி அணியை பொறுத்தவரை தற்போது தென்னாப்பிரிக்கா ஆஸ்திரேலியா அணிகள் தான் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெரும் சூழலில் இருக்கிறது. ஏதேனும் அதிசயம் நடந்தால் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு வரலாம். ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவு என நினைக்கும் பட்சத்தில் இந்திய அணி யாரை அரையறுதியில் எதிர்கொள்வார்கள் என்பதை தற்போது பார்க்கலாம்.
இதையும் படிங்க –60 70 போட்டி கம்மி.. விராட் பத்தி எதுவும் சொல்ல மாட்டேன்.. அவர் இன்ஜின் ரூம் எதுனு பாருங்க – அஸ்வின் பேச்சு
இந்திய அணி இரண்டாவது இடத்தை நிறைவு செய்திருந்தால் குரூப் பி பிரிவில் முதலிடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளும். ஒருவேளை இந்திய அணி குரூப் ஏ வில் முதல் இடத்தில் நிறைவு செய்திருந்தால் குரூப் பி வில் உள்ள ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்ளும். எனவே தென்னாபிரிக்கா அல்லது ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகளில் ஏதேனும் ஒரு அணியை தான் இந்தியா செமிபைனலில் எதிர்கொள்ளும் .இந்த போட்டி மார்ச் 4 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை துபாயில் நடைபெறுகிறது.
The post CT 2025: செமி பைனலில் இந்திய அணி யாருக்கு எதிராக ஆடும்.?. நடக்கும் நாள் மற்றும் நேர விபரங்கள் appeared first on SwagsportsTamil.