CT 2025: சச்சினின் 27 வருட சாதனையை முறியடித்த முகமது ஷமி.. ஜாகிர் கான் ரெக்காடும் முறியடிப்பு

4 days ago
ARTICLE AD BOX

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருக்கிறார்.  உலகின் சிறந்த வீரராக கருதப்படும் பும்ரா, தற்போது காயம் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடவில்லை.

மேலும் முகமது சிராஜும், இந்த தொடரில் சேர்க்கப்படவில்லை. இதனால் சமி மட்டும்தான் அனுபவ வீரராக இந்த தொடரில் விளையாடினார். இந்த சூழலில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

5 விக்கெட் வீழ்த்தி அபாரம்:

இதில் சமி தன்னுடைய முதல் ஓவரில் கடைசி பந்தில் சௌமியா சர்க்காரின் விக்கெட்டை வீழ்த்தினார். இதேபோன்று வங்கதேச அணியின் நம்பிக்கை நட்சத்திரம் மெஹதி ஹசன் விக்கெட்டையும் சமி கைப்பற்றினார். ஒரு கட்டத்தில் வங்கதேச வீரர்கள் ஜேக்கர் அலி மற்றும் தவ்ஹீத் ஹிர்தாய் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்து 150 ரன்கள் மேல் சேர்த்தனர்.

இந்த பார்ட்னர்ஷிப்பையும் சமி தான் முறியடித்தார். ஜேக்கர் அலி 68 ரன்கள் எடுத்திருந்தபோது சமி பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இதேபோன்று இறுதிக்கட்டத்தில் டன்ஷிம் ஹசன், டஸ்கின் அகமது விக்கெட்டுகளையும் சமி வீழ்த்தினார். இதன் மூலம் பத்து ஓவர் முடிவில் 53 ரன்கள் விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி சமி மாபெரும் சாதனையை படைத்தார்.

சச்சின் சாதனை முறியடிப்பு:

இதன் மூலம் சாம்பியன்ஸ் கோப்பை வரலாற்றில் விளையாடிய முதல் போட்டியில்  5 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற பெருமை சமிக்கு கிடைத்தது. இதன் மூலம் சச்சின் டெண்டுல்கர் வைத்திருந்த 27 ஆண்டுகால ரெக்கார்டை சமி முறியடித்து இருக்கிறார்.  சச்சின் 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பைத் தொடரில் முதல் முறையாக விளையாடிய போது, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 38 ரன்கள் விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையும் படிங்க: CT 2025: பாகிஸ்தான் அணியின் அதிரடி வீரர் விலகல்.. மாற்றுவீரர் இந்திய போட்டிக்கு முன் அறிவிப்பு

தற்போது இந்த ரெக்கார்டை தான் சா
மி முறியடித்திருக்கிறார்.
இதேபோன்று ஐசிசி தொடர்களில் அதிக முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையும் சமி படைத்திருக்கிறார். ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க், மெக்ராத் மற்றும் பாகிஸ்தான் வீரர் சையிது அப்ரிடி ஆகியோர் தலா மூன்று முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் சமி ஐந்து முறை ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இதேபோன்று ஐசிசி லிமிடெட் ஓவர் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையும் சமிக்கு கிடைத்திருக்கிறது.

The post CT 2025: சச்சினின் 27 வருட சாதனையை முறியடித்த முகமது ஷமி.. ஜாகிர் கான் ரெக்காடும் முறியடிப்பு appeared first on SwagsportsTamil.

Read Entire Article