ARTICLE AD BOX
சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ள போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ள நிலையில், வானிலை முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
இந்தப் போட்டி நடைபெற உள்ள நேரத்திற்கு முன்பாக மழை பெய்யும் என வானிலை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது. ஆனால் போட்டி நேரத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு மிக, மிக குறைவாக இருப்பதாகவும் வானிலை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது. அது மட்டுமே ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.

மாலை 6 மணி அளவில் மழை பெய்தால் இந்தப் போட்டி துவங்கும் நேரம் சற்று மாறுதல் அடையலாம். வானிலை அறிக்கையின்படி சென்னையில் போட்டு நாளான இன்று (மார்ச் 23) மாலை 5 மணிக்கு 34 சதவீதம் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.மாலை 6:00 மணிக்கு 23 சதவீதம் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. இது மிகக் குறைவான வாய்ப்பு தான். எனவே பெரிய அளவில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை.
ஒருவேளை மாலை 6 மணி அளவில் மழை பெய்தாலும் அதனால் ஆடுகளம் ஈரமாக இருக்கும் என்பதால் அரை மணி நேரம் போட்டி தாமதமாக துவங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. மற்றபடி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டி முழுமையாக நடைபெறவே அதிக வாய்ப்பு உள்ளது.
ஒருவேளை இந்த போட்டி மழையால் தாமதம் ஆனால், குறைந்தபட்சம் 5 ஓவர் போட்டிகளாக நடத்தப்பட்டால் மட்டுமே முடிவு அறிவிக்கப்படும். 5 ஓவர் போட்டியை கூட நடத்த முடியாவிட்டால் இந்த போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்படும். இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். அதேபோல முதல் இன்னிங்ஸ் முடிந்து இரண்டாவது இன்னிங்ஸின்போது மழை பெய்தால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி முடிவு எடுக்கப்படும்.
இந்தப் போட்டி நடைபெற உள்ள சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் பிட்ச் எப்போதும் போல பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு சம அளவில் ஒத்துழைக்கும். மேலும் மந்தமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இரண்டு அணிகளும் நிச்சயமாக இரண்டு அல்லது மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை பிளேயிங் லெவனில் ஆட வைக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டி இரவு 7:30 மணிக்கு துவங்க உள்ளது. இந்தப் போட்டியை ஜியோ ஹாட்ஸ்டார் செயலி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் இணையதளத்தில் பார்க்கலாம். தொலைக்காட்சியில் பார்க்க விரும்புபவர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும தொலைக்காட்சிகளில் இந்த போட்டியை பார்க்கலாம்.
செய்தி சுருக்கம்:
- சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் போட்டிக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
- போட்டி தொடங்குவதற்கு முன்பு மழை பெய்யும் என வானிலை அறிக்கை தெரிவிக்கிறது.
- போட்டி நேரத்தில் மழைக்கான வாய்ப்பு குறைவாக உள்ளது.
- மழை பெய்தால் போட்டி தாமதமாக தொடங்கலாம் அல்லது ஓவர்கள் குறைக்கப்படலாம்.
- குறைந்தபட்சம் 5 ஓவர்கள் வீதம் போட்டி நடத்த முடியாவிட்டால் கைவிடப்படும்.
- முதல் இன்னிங்ஸ் முடிந்து மழை பெய்தால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி முடிவு எடுக்கப்படும்.
- போட்டி இரவு 7:30 மணிக்கு தொடங்க உள்ளது.
- ஜியோ சினிமா மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிகளில் போட்டியை பார்க்கலாம்.
- சேப்பாக்கம் பிட்ச் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு சமமாக ஒத்துழைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.