ARTICLE AD BOX
சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ள லீக் போட்டி நடைபெற உள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் மூன்றாவது போட்டியில் இந்த இரண்டு அணிகளும் மோத உள்ளன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது.
அங்கு சுழற் பந்துவீச்சாளர்களுக்கு அதிக விக்கெட் கிடைக்கும் என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் நிச்சயமாக குறைந்தது 3 சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்த திட்டமிட்டு உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி பலவீனமாக இருக்கும் நிலையில் சிஎஸ்கே அணி அந்த அணியை சுழற் பந்துவீச்சின் மூலம் வீழ்த்த திட்டமிட்டு உள்ளது.

சிஎஸ்கே அணியில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் நிச்சயமாக பிளேயிங் லெவனில் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கலாம். அவர்கள் இருவரும் பேட்டிங்கிலும் கை கொடுப்பார்கள் என்பதால் அவர்கள் நிச்சயம் பிளேயிங் லெவனில் இருப்பார்கள்.
அவர்களுடன் ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் நூர் அஹமது இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது. அவர் சமீபத்தில் சர்வதேச போட்டிகளில் மிகச் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தார். இவர்கள் மூவருடன் பகுதி நேர சுழற்பந்துவீச்சாளர் தீபக் ஹூடா அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது. அவர் ஆல்ரவுண்டர் என்பதால் பகுதிநேர சுழற் பந்துவீச்சாளராகவோ அல்லது இம்பேக்ட் வீரராகவோ இடம்பெற வாய்ப்பு உள்ளது.
இவர்களை மும்பை இந்தியன்ஸ் அணி சமாளிக்குமா? என்ற கேள்வி உள்ளது. மும்பை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா இந்த போட்டியில் விளையாட மாட்டார். அவருக்கு காயம் ஏற்பட்டு இருப்பதால் அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ஒரு போட்டியில் ஆட தடை விதிக்கப்பட்டிருப்பதால் அவரும் இந்த போட்டியில் விளையாட மாட்டார். சூர்யகுமார் யாதவ் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த போட்டியில் பங்கேற்க உள்ளது. ரோஹித் சர்மா துவக்க வீரராக விளையாடுவார் என எதிர்பார்க்கலாம்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் பலம் என்பது வேகப்பந்து வீச்சு தான். முன்னாள் சிஎஸ்கே வீரரான தீபக் சாஹரை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கி உள்ளது. அவரும் ட்ரென்ட் போல்ட்டும் இணைந்து சிஎஸ்கே அணிக்கு எதிராக சிறப்பாக பந்து வீச முயற்சி செய்வார்கள்.
“சிஎஸ்கே என் அணி.. சக்கர நாற்காலியில் இருந்தாலும்..”நெகிழ வைத்த தோனி.. ரசிகர்கள் உருக்கம்
அந்த அணியில் சுழற்பந்துவீச்சாளர்களாக மிட்செல் சான்ட்னர், கர்ண் சர்மா மற்றும் முஜீபுர் ரஹ்மான் ஆகியோர் உள்ளனர். இவர்களை சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் சமாளித்து ஆடினால் நிச்சயம் இந்த போட்டியில் வெற்றி பெறலாம்.
செய்தி சுருக்கம்:
- சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன.
- சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச் என்பதால் சிஎஸ்கே அதிக ஸ்பின்னர்களை பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா இல்லாதது மும்பை இந்தியன்ஸுக்கு பின்னடைவாக இருக்கலாம்.
- சூர்யகுமார் யாதவ் மும்பை அணியை வழிநடத்துவார், ரோகித் சர்மா துவக்க வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சிஎஸ்கே பேட்ஸ்மேன்கள் மும்பை இந்தியன்ஸ் ஸ்பின்னர்களை சமாளித்தால் வெற்றி பெற வாய்ப்புள்ளது.