CSK vs MI ஐபிஎல் டிக்கெட்: விற்பனை தேதி, எப்படி முன்பதிவு செய்வது?

22 hours ago
ARTICLE AD BOX
சுருக்கம் செய்ய
CSK vs MI போட்டியின் டிக்கெட் விற்பனை விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன

CSK vs MI ஐபிஎல் 2025 டிக்கெட் விவரங்கள்: விற்பனை தேதி, எப்படி முன்பதிவு செய்வது எனத்தெரிந்து கொள்ளுங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Mar 18, 2025
10:36 am

செய்தி முன்னோட்டம்

ஐபிஎல் 2025 போட்டிகள் இந்த வார இறுதியில் தொடங்கவுள்ளன.

முதல் போட்டி, KKR அணிக்கும், RCB அணிக்கும் சனிக்கிழமை நடைபெறும் நிலையில், இரண்டாவது போட்டி, மார்ச் 23, ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும்.

அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

பலத்த எதிர்பார்ப்பை எதிர்கொண்டுள்ள இந்த போட்டியின் டிக்கெட் விற்பனை விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

டிக்கெட் விற்பனை எப்போது தொடங்கும், விலை விவரங்கள் மற்றும் எங்கே வாங்கலாம் என்பதை பற்றிய ஒரு சிறிய தொகுப்பு உங்களுக்காக:

விலைகள்

CSK vs MI IPL 2025 டிக்கெட் விலைகள்

ஐபிஎல் 2025 ல் CSK vs MI போட்டிக்கான டிக்கெட்டுகள் நாளை மார்ச் 19 அன்று காலை 10:15 மணிக்கு விற்பனைக்கு வரும்.

சிஎஸ்கே vs எம்ஐ டிக்கெட்டுகளின் விலை

₹ 1700 (டவர் C/D/E, கீழ்),

₹ 2500 - (டவர் I/J/K, மேல்),

₹ 3,500 - (டவர் C/D/E, மேல்),

₹ 4000 - (I/J/K, கீழ்) மற்றும்

₹ 7500 (டவர் KMK, Terrace).

எப்படி வாங்குவது?

CSK vs MI IPL 2025 டிக்கெட்டுகளை எப்படி வாங்குவது?

CSK vs MI போட்டிக்கான டிக்கெட்டுகள் chennaisuperkings.com மற்றும் district.in இல் மட்டுமே கிடைக்கும்.

CSK vs MI போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்கும் ரசிகர்கள் ரீஃபன்ட் பெற முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி கைவிடப்பட்டால் மட்டுமே பணம் முழுமையாகத் திரும்பப் பெறப்படும்.

ஒரு நபர் ஒரு பிரிவில் அதிகபட்சமாக இரண்டு விக்கெட்டுகளை வாங்க முடியும்.

IPL 2025க்கான டிஜிட்டல் டிக்கெட்டுகளை போட்டி தொடங்குவதற்கு ஆறு மணி நேரத்திற்கு முன்பு வரை மாற்றிக்கொள்ளலாம்.

அதாவது, போட்டி நேரத்தில் யாராவது டிக்கெட் வாங்கி அவசர வேலை செய்திருந்தால், வேறு யாராவது அதே டிக்கெட்டுடன் போட்டியில் கலந்து கொள்ளலாம், ஆனால் போட்டிக்கு ஆறு மணி நேரத்திற்கு முன்பு வரை.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

சேப்பாக்கத்தில் நடைபெறும் சென்னை - மும்பை இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் 19ம் தேதி ஆன்லைனில் விற்பனை....

ஒரு டிக்கெட்டின் விலை ஆயிரத்து 700 முதல் ஏழாயிரத்து 500 ரூபாய் வரை நிர்ணயம்#Chennai #Chepauk #IPL #Tickets #CSKvsMI #mivscsk #ChennaiSuperKingspic.twitter.com/G7emfyvNYd

— Thanthi TV (@ThanthiTV) March 18, 2025
Read Entire Article