Crying Disease: என்னடா இது புதுசா இருக்கு.!! உயிர்பலி வாங்கும் அழுகை வியாதி..எந்த நாட்டில் தெரியுமா.?

3 hours ago
ARTICLE AD BOX

காங்கோ நாட்டின் ஒரு பகுதியில் பரவிவரும் இனம்தெரியாத நோய் ஒன்று, இதுவரை 50-க்கும் மேற்பட்டோரை பலிவாங்கியுள்ளது. ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய நோய் குறித்த ஆராய்ச்சிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. இந்த நோய்க்கு, அழுகையும் ஒரு அறிகுறியாக இருப்பதாக கூறப்படுகிறது.

உயிர்பலி வாங்கும் விநோத நோய்

காங்கோ நாட்டின் வடமேற்கில் உள்ள ஈக்வேடியூர் மாகாணத்தில், இனம்தெரியாத புதிய நோய் ஒன்று பரவி வருவதாக கூறப்படுகிறது. இந்த நோய் தாக்குதலுக்கு உள்ளாகி இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 419 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம், காங்கோவிலிருந்து சுமார் 120 மைல் தூரத்தில் அமைந்துள்ள இரண்டு கிராமங்களில் நோய் பரவல் தொடங்கியதாக கூறப்படுகிறது. அழுகை வருவது இந்த நோயின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாக இருப்பதாக கூறுகிறார்கள்.

போலோகோ, போமேட் என்ற அந்த இரண்டு கிராமங்களில், முதலில், போலோகோவில், வௌவால் சாப்பிட்ட 3 குழந்தைகள் 48 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். அதே சமயம், போமேட் கிராமத்தில் 400-க்கும் மேற்பட்டோர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். அவர்களில் சிலருக்கு மலேரியா இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த இரண்டு கிராமங்களில் ஏற்பட்ட நோய்களுக்கான தொடர்பு ஏதும் இருப்பதாக இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என WHO எனப்படும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, அந்த இரண்டு கிராமங்களிலும், இந்த புதிய விநோத நோய்க்கான காரணம் குறித்து அதிகாரிகள் அய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த நோய் எதன் மூலம் பரவுகிறது என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன.?

இந்த நோய் தாக்கியவர்களில் பெரும்பாலானோருக்கு, குளிர் காய்ச்சல், உடம்பு வலி, பேதி போன்றவை ஏற்படுவதாக கூறப்படுகிறது. இன்னும் சிலருக்கு, மூட்டுகள் மற்றும் கழுத்துப் பகுதியில் வலி ஏற்படுவதாகவும், வியர்வை மற்றும் மூச்சுத்திணறலும் ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்களில், 59 வயதிற்குட்பட்டவர்களுக்கு பயங்கர தாகமும், சிறுவர்கள், குழந்தைகள் தொடர்ந்து அழுவதாகவும் கூறுகின்றனர்.

இந்த நோய் எதனால் ஏற்படுகிறது என்பதை கண்டறிய, தற்போது காங்கோ அரசுடன் இணைந்து, உலக சுகாதார மையம் தீவிர ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது.

Read Entire Article