ARTICLE AD BOX
இத்திரைப்படம் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி வெளியாகி, நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இத்திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா சத்ரபதி சம்பாஜி மஹாராஜாவின் மனைவியான யேசுபாய் போன்ஸ்லே கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
விக்கி கெளஷலின் நடிப்பிற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்திருக்கின்றன. அப்படி சத்ரபதி சம்பாஜி மஹாராஜா கதாபாத்திரத்திற்கு எப்படித் தன்னை உளவியல் ரீதியாகத் தயார்ப்படுத்திக் கொண்டார் என ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்தின் இந்தியப் பதிப்பிற்கு அளித்த பேட்டியில் பேசியிருக்கிறார் விக்கி கெளஷல்.
அந்தப் பேட்டியில் தனது 10 வருட சினிமா கரியர் பற்றித் தொடங்கி `சாவா' தொடர்பாகப் பல விஷயங்கள் குறித்துப் பேசினார். அவர், "நேரம் பறந்து கொண்டிருக்கிறது. இந்த பத்து வருடப் பயணம் அழகானதாக இருந்திருக்கிறது. மக்கள் எனக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். `மசான்' திரைப்படத்தில் பயணத்தைத் தொடங்கிய இந்தப் பையன் மறுபடியும் `சாவா' போன்றதொரு திரைப்படத்தில் நடிக்கப்போவதில்லை. நான் சம்பாஜி மஹாராஜாவாக மாறியதுதான் மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. வேறு ஒரு மனிதராக முழுமையாக மாறும்போது உங்களை அவராகவே பாவிப்பதற்குக் கொஞ்சம் வெட்கமாக இருக்கும்.
`விக்கி கௌஷலை அவமானப்படுத்தினேனா?'- சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க சல்மான் கான் செய்த செயல்!
உங்களுக்குள் `ஒரு நொடியாக இருந்தாலும் அந்த மனிதராக உன்னை எப்படி நம்பினாய்' எனக் கேள்வியை எழுப்பும். இந்தப் படத்துக்காக நான் முழுமையாக 1 1/2 வருடங்கள் என்னைத் தயார்ப்படுத்தினேன். முதல் 7 மாதத்தில் இந்த கதாபாத்திரத்திற்கு என்னைத் தயார் செய்து கொண்டேன். அடுத்த 7 மாதத்தில் நாங்கள் படப்பிடிப்பை நடத்தினோம். இயக்குநர் லக்ஷமன் எனக்கு முன்பு 2 1/2 வருட காலம் இந்த திரைப்படத்திற்குச் செலவழித்திருக்கிறார்.
இந்தப் படத்துக்கான வேலைகளைத் தொடங்கும்போது இயக்குநர் லக்ஷமன் என்னை ராசே என அழைக்கத் தொடங்கிவிட்டார். இன்று வரைக்கும் என்னை அவர் அப்படித்தான் அழைக்கிறார். அவர் என்னை அழைப்பது எனக்கு இனிமையான உணர்வையே முதலில் கொடுத்தது. அவர் என்னைச் செல்லமாக அப்படி அழைக்கிறார் என்றே எண்ணினேன். ஆனால், இந்த வார்த்தையை வைத்து ஆழ்மனதில் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் எனப் படப்பிடிப்பைத் தொடங்கிய பிறகுதான் தெரிந்தது.

படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் உங்களை ராசே என அழைத்த பிறகு அனைவரும் உங்களை அப்படியே அழைக்கத் தொடங்கிவிடுவார்கள். அது என் ஆழ்மனதிற்குள் நம்பிக்கையை விதைத்தது. அப்போதுதான் கண்ணாடியைப் பார்த்து, 'நீதான் அவர்' என்று சொல்வதற்கு நம்பிக்கை பிறந்தது. சத்ரபதி சம்பாஜி மஹாராஜாவின் கதையைப் படித்தவர்களுக்கு அந்தக் கதை எப்படி முடியப் போகிறதெனத் தெரியும். இப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியை ஷூட் செய்யும்போது ஒரு புதுவிதமான எனர்ஜி கிடைத்தது. ஒரு நடிகராக எனக்கு அது புதியதாக இருந்தது" எனப் பேசியிருக்கிறார்.
Chhaava: சத்ரபதி சாம்பாஜி வேடம், குதிரையில் என்ட்ரி... சாவா படம் பார்க்க வந்த ரசிகரின் வைரல் வீடியோஇப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play