ARTICLE AD BOX
ஆனால், மற்றொரு பக்கம் படத்திற்கு சில சிக்கல்களும் எழுந்திருக்கிறது. கனோஜி ஷிர்கே மற்றும் கன்ஹோஜி ஷிர்கே என்ற மாராத்திய போர்வீரர்களின் வழித்தோன்றல்கள் தங்களின் முன்னோர்கள் படத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக முரணை தெரிவித்திருக்கிறார்கள். இதனால் அவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்துள்ளனர். இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் மீது 100 கோடி மதிப்புள்ள அவதூறு வழக்கு தொடரவிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த மராத்திய போர்வீரர்களின் 13-வது வழிதோன்றலான லஷ்மிகாந்த் ராஜே ஷிர்கே, `` இப்படத்தின் தயாரிப்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம். படம் வரலாற்று உண்மைகளை திரித்து எங்களின் மூதாதையார்களை தவறாக சித்தரிக்கிறது. இந்த சித்தரிப்பு எனது குடும்ப மரியாதைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இதுமட்டுமல்ல, எங்களின் மூதாதையாரின் புகழுக்கு சேதம் விளைவிக்கிறது." எனக் கூறியிருக்கிறார்.

இந்த விவகாரத்தை தொடர்ந்து இயக்குநர் லஷ்மன் உடேகர் மராத்திய போர்வீரர்களின் வழிதோன்றல் குடும்பத்திற்கு மன்னிப்புக் கேட்டிருக்கிறார். அவர், `` கனோஜி, கன்ஹோஜி என இவர்கள் இருவரின் பெயரை மட்டும்தான் நாங்கள் குறிப்பிட்டிருக்கிறோம். அவர்களின் குடும்பப் பெயரை நாங்கள் தவிர்த்திருக்கிறோம். அவர்கள் எந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதையும் நாங்கள் எடுத்துச் சொல்லவில்லை. ஷிர்கே குடும்பத்தினரின் சென்ட்டிமென்ட்டை காயப்படுத்துவது எங்களின் நோக்கம் அல்ல. இத்திரைப்படம் உங்களுக்கு ஏதேனும் ஒரு களங்கத்தை ஏற்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்." என தெரிவித்திருக்கிறார்.
இந்த சர்ச்சை திரைப்படங்களில் வரலாற்றுத் துல்லியம் என்பதையும் எடுத்துக் கூறுகிறது.