ARTICLE AD BOX
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
Mar 20, 2025 07:23 IST
பிரதமர் மோடியுடன் பில் கேட்ஸ் சந்திப்பு!
அடுத்த தலைமுறைக்கு சிறப்பான எதிர்காலத்தை அமைத்திட தொழில்நுட்பம், சுகாதாரம், விவசாயம் உள்ளிட்டவை குறித்து பில்கேட்ஸ் உடன் பிரதமர் மோடி உரையாடியதாக கூறியுள்ளார்.
-
Mar 20, 2025 07:21 IST
தப்பியோடிய கைதி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு
சிதம்பரம் அண்ணாமலி நகரில் தப்பியோடிய கைதி ஸ்டீபன் துப்பாக்கியால் சுட்டுப்பிடிக்கப்பட்டார். 27 கொள்ளை வழக்குகள் உள்ள நிலையில் தப்பியோட முயன்ற கைதி ஸ்டீபன் சுட்டுப்பிடிக்கப்பட்டுள்ளார். போலீஸ் பிடியில் இருந்து தப்பியோட முயன்ற கைதியை காவல் ஆய்வாளர் அம்பேத்கர் சுட்டுப் பிடித்தார்.