Champions Trophy: இந்தியா கப் அடிக்கனும்..வட இந்தியாவில் கிரிக்கெட் ஜூரம்- ஜெகஜோராக பிரார்த்தனைகள்!

11 hours ago
ARTICLE AD BOX

Champions Trophy: இந்தியா கப் அடிக்கனும்..வட இந்தியாவில் கிரிக்கெட் ஜூரம்- ஜெகஜோராக பிரார்த்தனைகள்!

Delhi
oi-Mathivanan Maran
Subscribe to Oneindia Tamil

டெல்லி: கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை இந்தியா அணி வெல்ல வேண்டும் என்று வட இந்தியாவின் பல பகுதிகளில் கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்டின் இறுதி போட்டியில் இன்று இந்தியாவும் நியூசிலாந்தும் மோதுகின்றன. 2021-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை நியூசிலாந்து வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி இருந்தது. இதற்கு பதிலடி தரும் வகையில் இன்று இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்பது பெரும் எதிர்பார்ப்பு.

நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் இன்றைய போட்டியை காண்பதற்கு தயாராகி வருகின்றனர். இன்னொரு பக்கம் இந்திய கிரிக்கெட் அணி, வெல்ல வேண்டும் என்பதற்காக நாடு முழுவதும் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டும் வருகின்றன.

ஆரத்தி வழிபாடு

india new zealand Champions Trophy

உ.பி: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில், சாரங் நாத் மகாதேவ் ஆலயத்தில் இந்தியாவின் வெற்றிக்காக கிரிக்கெட் ரசிகர்கள் ஆரத்தி வழிபாடு நடத்தினர்.

வீரர்கள் படத்தை வைத்து யாகம்

india new zealand Champions Trophy

உ.பி, கான்பூரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ராதா மகாதேவ் கோவிலில், வீரர்களின் போட்டோக்களை வைத்து யாகம் நடத்தி சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

திருநங்கைகள் யாகம்

india new zealand Champions Trophy

உபி. பிரக்யாராஜில், இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்காக திருநங்கைகள் ஒருங்கிணைந்து யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் நடத்தினர்; இந்த யாகத்தின் போது கிரிக்கெட் வீரர்கள் படங்களை வைத்தும் வழிபாடு நடத்தப்பட்டது.

முகமது ஷமி உறவினர்கள் சிறப்பு தொழுகை

india new zealand Champions Trophy

உபி, மொரதாபாத்தில், இந்திய அணி வீரர் முகம்மது ஷமியின் உற்வினர்கள், இந்திய அணியின் வெற்றிக்காக சிறப்பு தொழுகை நடத்தினர்

அயோத்தியில் யாகம்

india new zealand Champions Trophy

உ.பி, அயோத்தியில் இந்திய அணியின் வெற்றிக்காக சாதுக்கள் சிறப்பு யாகம் நடத்தி பூஜைகளை செய்தனர்.

பீகார் பாட்னாவில் சிறப்பு யாகம்

பீகார், பாட்னாவில் இந்திய அணியின் வெற்றிக்காக கிரிக்கெட் ரசிகர்கள் சிறப்பு யாகம் நடத்தினர்.

சிறப்பு ஏற்பாடுகள்

india new zealand Champions Trophy

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்தியா- நியூசிலாந்து இடையேயான இறுதிப் போட்டியை காண்பதற்காக விளையாட்டு மைதாங்களில் பிரம்மாண்ட திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் கடற்கரை பகுதிகளில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி மாநகராட்சி மைதானத்திலும் இத்தகைய பிரம்மாண்ட திரை அமைக்கப்பட்டிருக்கிறது.

More From
Prev
Next
English summary
Amid huge expectations from cricket fans, India and New Zealand face off today in the Champions Trophy final. Special prayers are being conducted in temples and other places of worship across various parts of North India, hoping for India's victory in the Champions Trophy.
Read Entire Article