Champions trophy 2025: முதல் போட்டியில் தட்டி தூக்கிய சாண்ட்னர் படை.. வீழ்ந்தது பாகிஸ்தான்!

4 days ago
ARTICLE AD BOX

சாம்பியன்ஸ் ட்ராபி தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. 60 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்து வெற்றி வாகை சூடியுள்ளது மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி.

வெற்றியுடன் தொடங்கிய நியூசிலாந்து:

ஐசிசியின் மினி உலகக் கோப்பை எனப்படும் சாம்பியன்ஸ் ட்ராபியின் 9வது எடிஷன் இன்று தொடங்கியது. ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் 8 இடங்களில் வகிக்கும் அணிகள் மட்டுமே இந்த போட்டியில் பங்கேற்றன.

தங்களது முதல் சாம்பியன்ஸ் ட்ராபி பட்டத்தை கடந்த 2017ம் ஆண்டு வென்ற பாகிஸ்தான் இந்த முறை போட்டியை நடத்துகிறது. இருப்பினும் பாதுகப்பு மற்றும் அரசியல் காரணங்களால் அந்நாட்டிற்கு பயணிக்க மறுத்ததால், இந்தியா பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளன. இன்று நடைபெற்ற முதல் போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. டெவோன் கான்வே 10 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் வந்த கேன் வில்லியம்சன் 1 ரன்னில், தனது விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார்.

பாகிஸ்தான் படுதோல்வி:

அதிரடி ஆட்டக்காரர் டரில் மிட்செல், 10 ரன்கள் எடுத்திருந்தபோது, ஹரிஸ் ராஃப் பந்தில் அவுட்டானார். பின்னர், ஜோடி சேர்ந்த வில் யங்கும் டாம் லாத்தமும், பொறுமையாக ஆடி ரன் சேர்க்க தொடங்கினர். ஒரு கட்டத்தில், அதிரடியாக ஆடி பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை நாலா புறமும் சிதறடித்தனர்.

சதம் அடித்து அசத்திய வில் யங் 107 ரன்கள் எடுத்திருந்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதையடுத்து, கிளேன் பிலிப்ஸ் உடன் இணைந்து பவுண்டரி மழை பொழிந்தார் டாம் லாத்தம். அதிரடியாக ஆடிய கிளேன் பிலிப்ஸ் 61 ரன்கள் எடுத்திருந்தபோது தனது விக்கெட்டை இழந்தார்.

இறுதியில், 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 320 ரன்கள் எடுத்தது நியூசிலாந்து அணி. 321 ரன்கள் பெற்றால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் பேட்ஸ்மேன்கள், சொற்ப ரன்களுக்கு தங்களின் விக்கெட்டை பற்கொடுத்தனர்.

தொடக்க வீரர் சவுத் ஷகீல் 6 ரன்களுக்கும் கேப்டன் முகமது ரிஸ்வான் 3 ரன்களுக்கும் ஆட்டம் பகர் சமான் 24 ரன்களுக்கும் ஆட்டம் இழந்தனர். இருப்பினும், பாபர் அசாம், சல்மான அலி அகா ஆகியோர் பொறுப்புடன் விளையாடி ரன்கள் சேர்த்தனர்.

42 ரன்கள் எடுத்திருந்தபோது, சல்மான தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர், அரை சதம் அடித்த பாபர் அசாம் 64 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். இதையடுத்து, குஷ்டில் ஷா, அதிரடியாக ஆடி 69 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார்.

இறுதியில், 260 ரன்கள் எடுத்திருந்தபோது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது பாகிஸ்தான் அணி.

Read Entire Article