ARTICLE AD BOX
துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இதுவரை நடந்த ஆறு போட்டிகளின் முடிவில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் யார்? என்பது பற்றி இங்கே விரிவாகப் பார்க்கலாம். இந்தத் தொடரில் துபாயில் நடைபெறும் போட்டிகளில் மட்டுமே அதிக விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளன.
மற்றபடி பாகிஸ்தானில் நடைபெறும் போட்டிகளில் பேட்டிங்கில் அதிக ரன் குவிப்பு நடைபெற்றுள்ளது. இதுவரை நடந்த ஆறு போட்டிகளின் முடிவில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் யார் என்று பார்க்கலாம்.

நியூசிலாந்தின் மைக்கேல் பிரேஸ்வெல், நியூசிலாந்தின் வில்லியம் ஓ'ரூக் மற்றும் இந்தியாவின் முகமது ஷமி ஆகிய மூவரும் தலா ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர். ஆனால், முகமது ஷமிக்கு மூன்றாவது இடம் மட்டுமே அளிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த மூவரின் பௌலிங் சராசரி மற்றும் எக்கனாமி அடிப்படையில் பார்த்தால், மைக்கேல் பிரேஸ்வெல் முதல் இடத்தைப் பிடித்திருக்கிறார். இரண்டு போட்டிகளில் அடி இருக்கும் அவரது பௌலிங் சராசரி 12.8 என்பதாகவும், எக்கனாமி 3.2 என்பதாகவும் உள்ளது. அடுத்து, நியூசிலாந்தின் வில்லியம் ஓ'ரூக் 19 என்ற பௌலிங் சராசரி மற்றும் 5 என்ற எக்கனாமியை வைத்து இருக்கிறார்.
முகமது ஷமி இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் விக்கெட் வீழ்த்தாத போதும், வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அவரது பௌலிங் சராசரி 19.2 என்பதாகவும், எக்கனாமி 5.3 என்பதாகவும் உள்ளது. அதனால், அவருக்கு மூன்றாவது இடம் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்தப் பட்டியலில் நான்காவது இடத்திலும் ஒரு இந்திய வேகப்பந்து வீச்சாளர் இருக்கிறார். அவர் ஹர்ஷித் ராணா. அவர் இரண்டு போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அவரது பௌலிங் சராசரி 15.25 என்பதாகவும், எக்கனாமி 3.97 என்பதாகவும் உள்ளது. அதாவது முகமது ஷமியை விட சிறப்பான பௌலிங் சராசரி மற்றும் எக்கனாமியை வைத்து இருக்கிறார் ஹர்ஷித் ராணா.
முன்னதாக ஹர்ஷித் ராணா அதிக ரன்களை விட்டுக் கொடுப்பார் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், அதற்கு நேர்மாறான விஷயம் நடந்து இருக்கிறது. இந்தப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் தென்னாப்பிரிக்காவின் ககிசோ ரபாடா இருக்கிறார். அவர் ஒரு போட்டியில் மட்டும் விளையாடி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். ஆஸ்திரேலியாவின் பென் ட்வார்ஷியஸ் ஒரு போட்டியில் மட்டும் விளையாடி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.