ARTICLE AD BOX
மும்பை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, பந்த்ரா மஜிஸ்திரேட் நீதிமன்றம், கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திரா சஹல் மற்றும் அவரது மனைவி தனஶ்ரீ வெர்மா விவாகரத்து வழக்கை விசாரித்தது. நீதிபதி மாதவ் ஜம்தார் சஹலின் ஐபிஎல் வேலைகளை கருத்தில் கொண்டு குடும்ப நல நீதிமன்றம் விரைவாக விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
Chahal - Dhanashree விவாகரத்து
சஹல் மற்றும் தனஶ்ரீ கடந்த பிப்ரவரி 5ம் தேதி குடும்ப நல நீதிமன்றத்தில் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற மனு தாக்கல் செய்தனர். பரஸ்பர சம்மதம் இருந்தாலும் குடும்ப நல நீதிமன்றம் 6 மாத கூலிங்-ஆஃப் காலத்தை தள்ளுபடி செய்ய மறுத்து கடந்த பிப்ரவரி 20ம் தேதி உத்தரவிட்டது.

சஹல் மற்றும் தனஶ்ரீ திருமணமான 18 மாதங்களில் பிரிந்து கடந்த 2022, ஜூன் முதல் தனித்தனியாக வசித்துவருவது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றம், விவாகரத்துக்கான ஒப்புதல் விதிமுறைகளுடன் பகுதியளவு ஒத்துப்போவதனால் சஹல், தனஶ்ரீக்கு ரூ.4.75 கோடி ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. அவர் ரூ.2.37 கோடி வழங்கிவிட்டதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
குடும்ப நல நீதிமன்றம் திருமண ஆலோசகரின் அறிக்கையை சுட்டிக்காட்டி, மத்தியஸ்த முயற்சிகள் ஓரளவு மட்டுமே பின்பற்றப்பட்டதாகத் தெரிவித்தது.
இதனால் சஹல் மற்றும் தனஶ்ரீ, குடும்ப நல நீதிமன்றத்தின் தீர்ப்பை மேல்முறையீடு செய்ய மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

Cooling-off காலம் தள்ளுபடி
இந்து திருமணம் சட்டம் 13பி -ன் படி, விவாகரத்து வாங்க 6 மாத கூலிங் காலம் கட்டாயம். இது, மீண்டும் இணைந்து வாழ்வதற்கான வாய்ப்புகளை ஆராய்வதற்காக வழங்கப்படும். ஆனால் மீண்டும் இணைவதற்கான சாத்தியம் இல்லாதபோது இந்த 6 மாத காலத்தை தள்ளுபடி செய்யலாம்.
நீதிபதி ஜம்தார், சஹல் மற்றும் வெர்மா 2 ஆண்டுகள் தனித்தனியாக வாழ்வதைக் கருத்தில்கொண்டு 6 மாத கூலிங்-ஆஃப் காலத்தை தள்ளுபடி செய்தார்.
ஒப்புதல் விதிமுறைகளின்படி, நிர்ணயிக்கப்பட்ட ஜீவானாம்ச தொகையின் இரண்டாவது தவணை விவாகரத்து சான்றிதழ் வழங்கப்பட்ட பிறகு கொடுக்கப்பட வேண்டும்.
சஹல் மற்றும் தனஶ்ரீ விவாகரத்து நீண்ட நாட்களாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் 60 கோடி ஜீவனாம்சம் கேட்பதாக வெளியான வதந்திகளுக்கு எதிராக தனஶ்ரீயின் குடும்பத்தினர் குரலெழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
IPL 2025 : ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுத்த 13 வயது வீரர்; சூர்யவன்ஷிக்கு 1.1 கோடி கொடுக்க என்ன காரணம்?!IPL 2025
ஐபில் 2025-ல் சஹல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடவுள்ளார். வரும் மார்ச் 25ம் தேதி பஞ்சாப் அணி ஹைத்ராபாத்துக்கு எதிராக தங்களது முதல் போட்டியை விளையாடவுள்ளனர். மார்ச் இரண்டாம் வாரத்திலேயே சஹல், பஞ்சாம் அணியுடன் பயிற்சிகளை தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி 2025 இறுதுப்போட்டியில் இந்திய அணிக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக மைதானத்துக்கு வந்த சஹல் ஆர்.ஜே மஹ்வாஷ் உடன் காணப்பட்டார். இது டேட்டிங் சலசலப்புகளை எழுப்பியுள்ளது.
IPL 2025: கிரிக்கெட்டில் அதிக சம்பளம் வாங்கும் இந்திய வீரர்... விராட் கோலியை முந்திய வீரர் யார்?