Cauliflower Honey Chilli : காலிபிளவர் ஹனி சில்லி செய்யலாமா? ஈஸி தான்.. அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க!

4 days ago
ARTICLE AD BOX

தேவையான பொருட்கள்

மேரினேட் செய்ய தேவையான பொருட்கள்

  • காலிபிளவர்
  • சோள மாவு 2 டீஸ்பூன்
  • அரிசி மாவு 1 டீஸ்பூன்
  • மைதா 1 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்
  • உப்பு
  • இஞ்சி பூண்டு விழுது 1/2 டீஸ்பூன்

மேற்கூறிய அனைத்து பொருட்களையும் சுமார் 10 நிமிடங்கள் மரைனேட் செய்யவும். மாரினேட் செய்யப்பட்ட பேபி கான் வறுத்து, மிருதுவாக தனியாக வைக்கவும்.

காலிபிளவர் ஹனி சில்லி செய்ய தேவையான பொருட்கள்

  • எண்ணெய் 1 டீஸ்பூன்
  • இஞ்சி சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
  • பூண்டு 2 (பொடியாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் 2
  • வெங்காயம் 1 (கியூப் கட்)
  • கேப்சிகம் 1 (கியூப் கட்)
  • உப்பு 1/4 தேக்கரண்டி
  • தக்காளி சாஸ் 1 டீஸ்பூன்

மேலும் படிக்க : சுவையான தக்காளி ஊறுகாய் செய்யலாமா? இதோ இப்படி செய்து பாருங்க விரும்பி சாப்பிடுவாங்க!

செய்முறை

ரெஸ்டாரண்டில் நாம் சைடிஷ் ஆக ஆர்டர் செய்யும் காலிபிளவர் ஹனி சில்லி எப்படி செய்வது என்பது குறித்து இதில் பார்க்கலாம். இரண்டு ஸ்பூன் கான்பிளவர், ஒரு ஸ்பூன் அரிசி மாவு, ஒரு ஸ்பூன் மைதா மாவு, கொஞ்சமாக மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, அரை ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவுடன் கொஞ்சம் கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

காலிபிளவர் சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளலாம். பெரியதாக இருந்தால் அதை இரண்டாகப் பிளந்து நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். காலிபிளவர் அனைத்தும் நாம் கலக்கி வைத்த அந்த மாவில் சேர்த்து நன்கு பிரட்டி 10 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள். பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நாம் மேரினேட் செய்து வைத்த காலிபிளவர் பொறித்து எடுக்கவும். அதாவது நாம் மாவில் கலக்கி மிக்ஸ் செய்து வைத்த காலிபிளவரை பொறித்து எடுக்கவும். காலிபிளவர் நன்கு பொன் நிறமாக மாறும் வரை வறுத்து எடுக்க வேண்டும்.

இப்போது ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் பூண்டு, இஞ்சி சின்ன சின்னதாக நறுக்கி வைத்ததை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இரண்டு பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு வெங்காயம், கேப்ஸிகம், உப்பு, சிறிது டொமேட்டோ சாஸ் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள். பின்னர் அதில் காலிபிளவர் மிக்ஸ் செய்ய பயன்படுத்திய பாத்திரத்தில் ஒட்டி கொண்டு இருக்கும் அந்த மாவை கழுவி இதில் ஊற்றிக் கொள்ளுங்கள். இதற்கு கான்பிளவர் மாவு எல்லாம் தனியாக கரைத்து நீங்கள் சேர்க்க வேண்டிய அவசியமில்லை.

காலிபிளவர் பொறிக்க பயன்படுத்தி அந்த மாவு சிறிது பாத்திரத்தில் மீந்திருக்கும். அதனை கழுவி இதில் ஊற்றினாலே போதும் கான்பிளவர் தனியாக தேவையில்லை. இப்போது பொறித்து வைத்த காலிபிளவர் சேர்த்து, அதில் வெங்காயத்தாள் சிறிது, வெள்ளை எள்ளு ஒரு டீஸ்பூன், ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து ஐந்து நிமிடம் கழித்து அணைத்து விடுங்கள். இப்போது உங்களுக்கு சுவையான காலிபிளவர் ஹனி சில்லிரெடி. இதனை வீட்டில் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.
Read Entire Article