ARTICLE AD BOX
BSNL-க்கு தாராள மனசு.. 6 மாசத்துக்கு No ரீசார்ஜ் பிளான் ரெடி.. வாய்ஸ், SMS, 90GB டேட்டா உண்டு.. எந்த பிளான்?
பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் இப்போது அதன் வாடிக்கையாளர்களுக்கு (BSNL customers) 6 மாதம் வரை நோ-ரீசார்ஜ் ப்ரீபெய்ட் பிளான் திட்டத்தை (6 months no recharge prepaid plan) அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் முழுமையாக 180 நாட்களுக்கு செல்லுபடியாகிறது (BSNL 180 days validity plan). இந்த திட்டத்துடன் வாய்ஸ் கால்ஸ், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை நிறுவனம் வழங்குகிறது. இந்த பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டத்தின் (BSNL prepaid plan) விலை என்ன? மற்றும் இதன் கீழ் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் தொலைத்தொடர்பு நிறுவனம் (Bharat Sanchar Nigam Limited Telecom Company) இப்போது இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. இதுவரை இல்லதா அளவிற்கு BSNL நிறுவனம் இப்போது குறுகிய காலத்தில் அதிக வாடிக்கையாளர்களை தனது நெட்வொர்க் பக்கம் இழுத்து அதிக லாபத்தை சம்பாதித்து வருகிறது. இந்த முன்னேற்றத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல, நிறுவனம் இப்போது 180 நாள் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

BSNL-க்கு தாராள மனசு.. கம்மி விலையில் 6 மாசத்துக்கு No ரீசார்ஜ் பிளான்:
பிஎஸ்என்எல் நிறுவனம் இப்போது 180 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தை நிறுவனம் பிஎஸ்என்எல் ரூ. 897 திட்டம் (BSNL Rs 897 Plan) என்ற விலையுடன் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் 6 மாதம் செலுப்படியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த ஒரு திட்டத்தை ரீசார்ஜ் செய்வதன் மூலம், இத்திட்டத்தின் பயனர்கள் 6 மாதத்திற்கு ரீசார்ஜ்ஜே செய்ய வேண்டிய அவசியமே இல்லை.
பிஎஸ்என்எல் அறிமுகம் செய்துள்ள இந்த புதிய பிஎஸ்என்எல் 897 பிளான் (BSNL 897 Plan) 180 நாட்களுக்கு செல்லுபடியாகிறது. இந்த திட்டம் 180 நாட்களுக்கு எந்தவித தடையுமின்றி முழு செல்லுபடியாகும் காலத்திற்கும் (180 days validity) அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம் 90GB ஹை ஸ்பீட் டேட்டா (high speed data) நன்மையை வழங்குகிறது.
பிஎஸ்என்எல் ரூ. 897 திட்டம் (BSNL Rs 897 Plan):
இந்த பிஎஸ்என்எல் 897 திட்டம் தினசரி 100 எஸ்எம்எஸ் (SMS) நன்மையையும் வழங்குகிறது. இதன் மூலம் மொத்த செல்லுபடியாகும் காலத்திற்கு நீங்கள் 1800 எஸ்எம்எஸ் மெசேஜ்களை பெறுவீர்கள். இந்த திட்டம் குறைந்த செலவில் 6 மாதத்திற்கு வாய்ஸ் கால், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் நன்மையை அனுபவிக்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது. இந்த திட்டம் தினசரி வெறும் 4 ரூபாய் 90 பைசா விலையில் கிடைக்கிறது.
மக்கள் இப்போது ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), விஐ (Vi) என்ற வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்களின் திட்டங்களை தேர்வு செய்வதற்கு பதிலாக, இப்போது அரசு நடத்தும் பிஎஸ்என்எல் டெலிகாம் நிறுவனத்தின் பக்கம் மாற துவங்கியுள்ளனர். இதற்கு ஒரே காரணம் விலை வித்தியாசம் என்பதை தாண்டி, பிஎஸ்என்எல் இப்போது அதன் பல வட்டங்களில் BSNL 4G சேவையை வழங்க துவங்கியுள்ளது. இதனால் BSNL நம்பகமான டெலிகாம் நிறுவனமாக உருமாறியுள்ளது.