ARTICLE AD BOX

ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு தேவையான இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டும் இன்றி அரசின் நிவாரண உதவியும் இதன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் வீடுகளுக்கு நேரடியாக சென்று நியாய விலைப் பொருள்களை விநியோகம் செய்யும் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவது போல், தமிழ்நாட்டில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அதிகாரிகளை அனுப்பி ஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.