ARTICLE AD BOX
மகாராஷ்டிராவில் புஷ்பக் ரயில் பணிகள் மீது கர்நாடகா எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 40 பேர் படுகாயம் அடைந்தனர். புஷ்பக் ரயிலில் ஃபயர் அலாரம் அடித்ததால் ரயில் பெட்டியில் இருந்து பயணிகள் வெளியேறிய போது எதிர் திசையில் வந்த ரயில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாவது, மகாராஷ்டிரா, ஜல்கானில் ரயில் மோதி 8 பேர் உயிரிழந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்