ARTICLE AD BOX
கேப்டன் விஜயகாந்தின் சிகிச்சைக்காக நான் அமெரிக்காவில் இருந்தபோதுதான், அமெரிக்காவில் இந்தியர்களின் பங்கு மிகப்பெரியது என்பதை உணர்ந்துகொண்டேன். ஆனால், இன்று பாஸ்போர்ட், விசா காலாவதியாகிவிட்டது என இந்தியர்களை திரும்பி அனுப்பி வைக்கும்போது, அவர்களை சங்கிலி பூட்டி அனுபவித்து கண்டிக்கத்தக்கது என பிரேமலதா தெரிவித்தார்.
சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜய்காந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "பாலியல் வன்கொடுமை, பெண்களை பின்தொடர்தல் போன்ற விஷயங்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தூக்கிலிடுங்கள்
ஆனால், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடருகிறது. இதனால் பாலியல் பலாத்கார விஷயங்களில் கைது செய்யப்படும் குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்ட வேண்டும். போதை கலாச்சாரம் தமிழ்நாடு என்ற நிலை மாறியுள்ளது.
இதையும் படிங்க: மாணவியிடம் ஆபாச பேச்சு; தற்காலிக ஆசிரியரை வீட்டுக்கு அனுப்பிய பள்ளிக்கல்வித்துறை.. கைது நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரம்.!
இதனால் தான் பாலியல் வன்கொடுமை நடக்கிறது. பெண்களுக்கு வயது வித்தியாசமின்றி பலாத்காரம் தொடருகிறது. அவை தடுக்கப்பட வேண்டும். பெண்கள் பாதுகாப்பு விஷயத்தில் தமிழ்நாடு அரசு நடந்துகொள்ளும் விதம் சரியாக தெரியவில்லை.
அமெரிக்காவில் இருந்து கைவிலங்கு அனுப்பப்பட்ட நபர்களில் இந்தியர்களும் இருக்கிறார்கள் என்பது வேதனைக்குரிய, கண்டனத்திற்குரிய விஷயம். அமெரிக்கா இந்தியர்களால் முன்னேறி இருக்கிறது" என பேசினா
இதையும் படிங்க: மதுரை: காவலர் கொலை வழக்கில் திருப்பம்.. மைத்துனரின் பதறவைக்கும் செயல்.. விலகிய மர்மம்.!