ARTICLE AD BOX
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சயிப் அலிகான். இவருடைய வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் பணிப்பெண்ணிடம் தகராறு செய்து கொண்டிருந்தார். இதனை தட்டி கேட்டபோது நடிகர் சயிப் அலிகானை அவர் கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவருடைய வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டு சிகிச்சையில் இருக்கிறார்.
இந்த சம்பவம் பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல்துறையினர் சிசிடிவி கேமரா ஆய்வு செய்து குற்றவாளியை வலைவீசி தேடி வந்த நிலையில் கிட்டத்தட்ட 35 தனிப்படையைகள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது நடிகரை கத்தியால் குத்திய விஜயதாஸ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர் தானேவில் பதுங்கி இருந்த நிலையில் தற்போது கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.