#Breaking: பழிவாங்க சதிச்செயல்? - சீமான் மனைவி கயல்விழி பரபரப்பு குற்றசாட்டு.! 

4 hours ago
ARTICLE AD BOX

 

நடிகை வியலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், வழக்கு விஷயத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வளசரவாக்கம் காவல்துறையினர், சீமானின் வீட்டில் நேரில் வந்து சம்மன் வழங்கிச் சென்றனர். 

அதாவது, அதிகாரிகளால் சம்மன் வீட்டின் வாசலில் எந்த விதமான தகவலும் இன்றி ஒட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. சம்மனை வீட்டு முன்பு ஒட்டிவிட்டுச் சென்றதால், அதனை அகற்றுமாறு சீமானின் மனைவி கயல்விழி கூறியதன்பேரில், வீட்டு உதவியாளர் அதனை கிழித்தார். 

இதையும் படிங்க: சம்மனை இங்கே ஒட்டிச் செல்லுங்கள் - சீமான் வீடு முன் பிரத்தியேக பதாகை.!

சம்மன் கிழிக்கப்பட்டது குறித்து பாலக்கரை காவல் எல்லைக்குட்பட்ட நீலாங்கரை அதிகாரிகளுக்கு தகவல் தெரியவர, நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன், நேரில் சீமானின் வீட்டிற்கு வந்தார். அங்கு பணியில் இருந்த முன்னாள் இராணுவ வீரர் மற்றும் சீமானின் பாதுகாவலரை பிடித்து தரதரவென இழுத்தனர். 

சம்மன் கிழிக்கப்பட்டபோது அவர் உடன் அமைதியாகவே இருந்த நிலையில், அவரை முதலில் அதிகாரிகள் தட்டிதூக்கினார். அவரின் கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து, சீமானின் உதவியாளர், வீட்டின் உதவியாளர் என 2 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

இதனிடையே, இன்று செய்தியாளர்களை சந்தித்த கயல்விழி சீமான், "நேற்று நடந்தது எதிர்பார்க்காதது. அவரை கைது செய்தது திட்டமிடப்பட்டது. ஈகோவில் அனைத்தையும் செய்கிறார்கள். கடந்த முறை வரும்போதே, தேதி கேட்டுத்தான் குறித்து சென்றார்கள். நேற்று சீமான் இல்லாதபோது, வேண்டும் என்றே கதவில் ஒட்டிவிட்டு சென்றார்கள். 

நீதிமன்றம் வழக்கை விரைவுபடுத்த கூறினாலும், சம்மனை நேரில் கொடுப்பதாக கூறியவர்கள், வீட்டிற்குள் வந்து சென்று இருக்கலாமே. யாருமே இல்லாத வீட்டில் சம்மன் ஓட்டுவதுபோல செயல்படுகிறார்கள். சம்மன் கொடுத்ததை நாங்கள் எடுத்து வைத்து படிக்கிறோம். 

முன்னாள் இராணுவ வீரர் என்ற மரியாதை இல்லாமல், அவரை கைது செய்து அழைத்து செல்கிறார்கள். கைது நிலைக்கு கொண்டு செல்வார்கள் என நான் நினைக்கவில்லை. வளசரவாக்கம் காவல்துறை சென்றபின்னர், நீலாங்கரை காவல்துறை வர வேண்டிய அவசியம் என்ன?

எங்கள் வீட்டில் இருப்போரை கைது செய்து எங்களை மிரட்ட முயற்சிக்கிறார்கள். நான் திருமணம் செய்ததில் இருந்து இன்று வரை பிரச்சனை தொடருகிறது. சம்மன் எங்களுக்கு தானே ஒட்டுகிறீர்கள். நீலாங்கரை காவல்துறை திட்டமிட்டு செய்துள்ளனர். வீட்டுக்குள் வந்து கைவைக்க வேண்டும் என்பது காவல் ஆய்வாளர் பிரவீனின் எண்ணம் போல தெரிகிறது. 

அதிகாரிகள் இப்படி நடப்பார்கள் என நாங்கள் நினைக்கவில்லை. சம்மன் கொடுத்தவர்கள் இதற்கு முன்பு சாதாரணமாக வந்து பேசிவிட்டு சம்மன் கொடுத்துவிட்டு செல்வார்கள். சம்மனை கிழிக்கச்சொன்னது நான் தான். அதிகாரிகள் என்னை கைது செய்யட்டும். காழ்ப்புணர்ச்சியுடன் நீலாங்கரை ஆய்வாளர் பிரவீன் செயல்படுகிறார்" என பேசினார்.

இதையும் படிங்க: சிக்கப்போகும் சீமான்? முக்கிய ஆதாரத்தை கொடுத்த நடிகை.. 7 மணிநேரம் விசாரணை.!

Read Entire Article