ARTICLE AD BOX

தமிழகத்தில் நேற்று திமுக அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு வேளாண்மைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்து வரும் நிலையில் இன்று 5-வது முறையாக வேளாண்மை முறையாக வேளாண் பட்ஜெட் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டை அந்த துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வேளாண்மை துறைக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
தமிழக விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி செய்வதற்காக 1472 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பசுமை காய்கறிகளை நுகர்வோர் வீடுகளுக்கே கொண்டு சேர்க்கும் திட்டம் 20 உழவர் சந்தைகள் மூலம் செயல்படுத்தப்படும்.
மேலும் ஆன்லைன் டெலிவரி மூலமாக உழவர் சந்தைகளில் இருந்து பொருட்கள் வீடுகளுக்கு சென்றடையும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.