ARTICLE AD BOX
புதிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு மாநில அரசு ஏற்றுக்கொள்வதில், தொடக்கத்தில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. புதிய கல்விக்கொள்கையால் ஹிந்தி வந்துவிடும் என திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. இந்த விஷயம் குறித்து மத்திய ஆளும் பாஜக அரசு, மாநிலத்தில் ஆளும் திமுக அரசு இடையே கருத்து முரண் நிலவுகிறது.
திமுகவினர், அதன் கூட்டணி கட்சியினர் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் ஹிந்தி பயிற்றுவிக்கப்படும் நிலையில், மாநிலத்தில் அரசு பள்ளிகளில் தாய்மொழியுடன் எதோ ஒரு மொழியை கூடுதலாக மாணவர்கள் படிப்பதில் என்ன பிரச்சனை? பணம் இருப்பவர்கள் சிபிஎஸ்இ பள்ளியில் படிக்கும் படிப்பு, ஏழை மாணவர்களுக்கும் கிடைத்தால் என்ன தவறு? என பாஜக அண்ணாமலை புதிய கல்விக்கொள்கையை ஆதரித்து பேசி வருகிறார்.
அரசியல் செய்யாதீங்க
புதிய கல்விக்கொள்கை படி பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழ்நாடு அரசு எதிர்ப்பதால், தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதிகள் மத்திய அரசால் நிறுத்தப்பட்டது. மேலும், இன்று காலை மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான், புதிய கல்விக்கொள்கை தமிழ்நாட்டுக்கு எதிரானது இல்லை. மாணவர்களின் எதிர்கால நலனில் தமிழ்நாடு அரசு அரசியல் செய்ய வேண்டாம் என கோரிக்கை வைத்திருந்தார்.
இதையும் படிங்க: #Breaking: இந்தியை திணிக்கிறோமா? அரசியல் செய்யாதீங்க - மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் பரபரப்பு விளக்கம்.!
இந்நிலையில், சென்னையில் உள்ள கிண்டியில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "மக்களுக்கு சேரவேண்டிய நிதி உரிமைகளை கேட்கிறோம். நாம் செலுத்திய வரியை கேட்கிறோம். மாணவர்களுக்கு சேர வேண்டிய ரூ.2150 கோடி ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. அதனை கேட்கிறோம். அவர்கள் வழங்கவில்லை. இதில் என்ன அரசியல் இருக்கிறது.
அரசியல் செய்வது நீங்கள்தான்
மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் எப்போதுமே தமிழ்நாடு எதிர்ப்பு தான். தமிழ்நாடு மொழிப்போருக்காக பலரும் உயிரை கொடுத்துள்ளனர். மாணவர்களின் கல்வி விஷயத்தில் யார் அரசியல் செய்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும்.
இரண்டு மொழிக்கொள்கை என்பது தமிழ்நாடு மாநிலத்தின் உரிமை. அதனை நாம் கடைபிடிப்பது எப்படி அரசியல் ஆகும்?. மத்திய அரசு தமிழ்நாடு மக்களை வஞ்சிக்கிறது. மும்மொழி கொள்கை என்பது நமக்கு எப்போதும் எதிரானது ஆகும். அண்ணாசாலைக்கு தனியாக வருவதாக அண்ணாமலை பேசிய விஷயம் குறித்து நான் பேச விரும்பவில்லை" என பேசினார்.
இதையும் படிங்க: ரூ.150 கோடி மதிப்புள்ள 90 ஏக்கர் நிலம்; முதல்வர் பிறப்பித்த உத்தரவு., துணை முதல்வர் அறிவிப்பு.!