#Breaking: தமிழிசை சௌந்தர்ராஜன் கைது? வீட்டுச்சிறைவாசம்.! காவல்துறை குவிப்பு.!

6 hours ago
ARTICLE AD BOX

 

தமிழ்நாடு டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனையின் முடிவில், ரூ.1000 கோடி அளவில் ஊழல் நடந்தது என குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த விஷயம் தமிழ்நாடு அரசியலில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே டாஸ்மாக்கில் மதுபான பாட்டீலுக்கு கூடுதல் தொகை வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்து வந்த நிலையில், பல்வேறு விஷயங்களில் டாஸ்மாக் நிறுவனம் முறைகேடு செய்து, ரூ.1000 கோடி அளவில் ஊழல் நடந்துள்ளதாக அமலாக்கத்தை கூறியது.

இதையும் படிங்க: நான் என்ன தீவிரவாதியா? டென்சனில் தமிழிசை., சாலையில் இறங்கி போராட்டத்தில் குதித்த பாஜக தொண்டர்கள்.. சென்னையில் பரபரப்பு.!

செந்தில் பாலாஜி துறையில் முறைகேடு

ஏற்கனவே மதுவிலக்கு, மின்சாரம், & ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமினில் வெளியே வந்து மீண்டும் அமைச்சர் பொறுப்பேற்றார். இதனிடையே, அவர் சார்ந்த துறையில் மோசடி நடந்தது தெரியவந்துள்ளது. 

இதனால் டாஸ்மாக் ஊழலுக்கு பொறுப்பேற்று, துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என பாஜக சார்பில் முறையிடப்பட்டுள்ளது. மேலும், 17 மார்ச் 2025 இன்று, காலை 10 மணியளவில், சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த பாஜக அழைப்பு விடுத்துள்ளது.

வீட்டுச்சிறையில் தமிழிசை

இந்நிலையில், சென்னை தியாகராஜ்நகர் பகுதியில் வசித்து வரும் பாஜக பிரமுகர் வினோஜ் பி செல்வம் கைது செய்யப்பட்டு, தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளார். பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், வீட்டில் இருந்து புறப்படும் முன்பு குவிந்த காவல்துறையினர், அவரை வீட்டிலேயே சிறைப்படுத்தி வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவரின் வீடு முன்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பெண் காவல்துறையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

டாஸ்மாக் ஊழலை கண்டித்து சற்று நேரத்தில் நடைபெறவுள்ள முற்றுகை போராட்டத்தில் கலந்து கொள்ள உள்ள திருமதி.Dr.தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் வீட்டிற்கு முன்னால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளார்கள்..!

கேட்டால், திராவிட மாடல் என்பார்கள்! pic.twitter.com/INwkp7PAvt

— M.saran krishnan (மோடியின் குடும்பம் )🇮🇳🚩🚩 (@MSaranbjp) March 17, 2025

இதையும் படிங்க: மும்மொழி கொள்கை மோதல்: ஆங்கிலம் கற்றால் தமிழ் அழியாதா? தமிழிசை பேச்சு..!

Read Entire Article