Breaking: டெல்லியின் புதிய முதல்வராக ரேகா குப்தா தேர்வு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

4 days ago
ARTICLE AD BOX

தலைநகர் டெல்லியில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் 48 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அமோக வெற்றி பெற்றது. இதன் மூலம் 27 வருடங்களுக்கு பிறகு டெல்லியில் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் டெல்லியின் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் பாஜக மத்தியில் இழுப்பறி நிலவிய நிலையில் தற்போது புதிய முதல்வரை தேர்வு செய்துள்ளனர்.

இன்று மாலை டெல்லியின் புதிய முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து புதிய முதல்வராக ரேகா குப்தா ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் விரைவில் டெல்லி முதல்வராக பொறுப்பேற்பார் என்று தகவல் வெளிவந்துள்ளது.

Read Entire Article