ARTICLE AD BOX
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, "நான் செருப்பு அணியாமல் தான் இருக்கிறேன். வேண்டுதல் காரணமாக செருப்பு அணியவில்லை. ஜெயிலுக்கு சொல்லவில்லையே. மக்களின் வரிப்பணத்தை சாப்பிட்டுவிட்டு, அவர்களுக்கு நல்லது செய்வதாக நான் நடிப்பதில்லை. இதையும் படிங்க: திருமாவளவனும் இப்படியா? ஹிந்தி திணிப்பு விஷயத்தில் இரட்டை வேடம்? அண்ணாமலை குற்றச்சாட்டு.!
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது
மக்களை சென்று திமுகவினர் நேரில் சென்று பார்க்கலாம். ஆனால், அதனை விட்டுவிட்டு பாஜகவை திட்டுவதையே திமுக வாடிக்கையாக வைக்கிறது. இதனால் சட்டம் ஒழுங்கு சந்திசிரிக்கிறது.
திமுகவின் அனைத்து கட்சி கூட்டம் எதற்கு நடக்கிறது என்பதே தெரியவில்லை. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், சட்டம் ஒழுங்கு விஷயங்களுக்கு அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தினால், நாங்களே வருகிறோம்" என பேசினார்.
இதையும் படிங்க: #Breaking: தோல்வியடைந்த திமுக.. அன்பில் மகேஷுக்கு அமைச்சர் பொறுப்பு தேவையா? - அண்ணாமலை காட்டம்.!