ARTICLE AD BOX

சாம்பியன் டிராபி கோப்பையில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் இறுதிப்போட்டியில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் 50 ஓவர்கள் முடிவில் கேள்வி விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிற இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா 76 ரன்கள் வரை எடுத்தார்.அதற்கு அடுத்தடுத்து வந்த இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் இறுதியில் இந்திய அணி 49 ஓவர்களில் 254 ரன்கள் எடுத்து 4விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்நிலையில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணிக்கு தற்போது அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி ஐசிசி டிராபியை வென்றதற்கு பெருமை அடைவதாகவும் தொடர் முழுவதும் இந்திய அணி சிறப்பான முறையில் விளையாடியதாகவும் கூறியுள்ளார். இதுபோன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்முவும் இந்திய அணிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலினும் இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக கூறி நியூசிலாந்துக்கும் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.