ARTICLE AD BOX
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளை முற்றிலுமாக ஒழிக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பாக நடைபெறும் தேடுதல் வேட்டையில் நக்சலைட்டுகள் மீது துப்பாக்கி சூடுகள் நடைபெறுகிறது. உள்துறை மந்திரி அமித்ஷா நக்சல் இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவோம் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்று சத்தீஸ்கர் மாநிலத்தில் 14 நக்சலைட்டுகளை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர். இன்று காலை நக்சல் மற்றும் போலீசாருக்கு இடையே பயங்கர மோதல் நடைபெற்ற நிலையில் 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் நக்சல் இல்லாத நாடு என்ற கொள்கையுடன் பாஜக செயல்பட்டு வரும் நிலையில் கடந்த வருடமும் ஏராளமான நக்சல் கொல்லப்பட்ட நிலையில் இந்த வருடமும் நக்சல் வேட்டை தொடர்கிறது.