ARTICLE AD BOX
இந்திய அணி முதல் முறையாக கோ கோ போட்டியில் உலக கோப்பையை வென்றுள்ளது. அதாவது கோகோ போட்டியில் ஆண்கள் பிரிவில் முதல் முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. டெல்லியில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய ஆடவர் அணி 54-36 புள்ளிகளில் நேபாளத்தை வீழ்த்தி முதல் சாம்பியன் ஆனது.
மேலும் இதேபோன்று கோகோ போட்டியில் இந்திய மகளிர் அணியும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இன்று இந்திய ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக மகளிர் அணி மற்றும் ஆடவர் அணி இரண்டுமே உலகக் கோப்பையை தட்டி தூக்கியுள்ளது.