ARTICLE AD BOX

தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் அந்த தேர்தலில் திமுக கட்சியின் வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்றார். ஆனால் இந்த தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் ராஜமாணிக்கம் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் நீதிபதி இளந்திரையன் அன்னியூர் சிவாவின் வெற்றி செல்லும் என்று உத்தரவிட்டார். மேலும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அன்னியூர் சிவா 67 ஆயிரத்து 587 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.