ARTICLE AD BOX
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான், உலகளவில் ரசிகர்களை கொண்டவர் ஆவார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் இவர் இசையமைத்து வருகிறார். தொடர்ந்து பல படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றி வருக்கார்.
நெஞ்சு வலி
இந்நிலையில், இன்று இசையமைப்பாளர் ஆயிரம்விளக்கு பகுதியில் செயல்பட்டு வரும் அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதி
இதனால் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டவருக்கு, மருத்துவர்கள் இரத்த நாளங்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்யும் சிகிச்சை அளித்து வருகின்றனர் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: "பாதி மலையை காணும்.. யார் கேள்வி கேட்பா? வயிறெல்லாம் எரியுது" - மோகன் ஜி.!
ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்காலிகமாக அவரின் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் முயற்சித்து வருகின்றனர். அவரின் உடல்நலம் முன்னேறும் என நம்பப்படுகிறது.
இதையும் படிங்க: பண்ணைபுரம் டூ லண்டன் சிம்பொனி.. இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு..