#Breaking: 'அப்பா'-வை படுகேவலமாக வருணித்து ஜெயக்குமார்.. கழுவி ஊற்றி பரபரப்பு பேச்சு.!

2 days ago
ARTICLE AD BOX

 

இன்றைய ஆட்சியாளர்களின் செயலுக்கு 2026ல் மக்கள் உரிய பதிலை அளிப்பார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்தார். 

சென்னையில் உள்ள மயிலாப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், "உங்களின் வீட்டில் இருக்கும் குழந்தை பக்கத்து வீட்டிற்கு சென்று, ஒரு பெண்மணியை அம்மா என அழைத்தால் மகிழ்ச்சி அடைவார்கள். அதே நேரத்தில், பக்கத்த்து வீட்டில் சென்று ஒருவரை பார்த்து அப்பா என அழைத்தால் என்ன நிலைமை ஆகும்?. எவனும் அப்பன் இல்லை. என் குழந்தைக்கு நான் அப்பன். 72 வயதில் அப்பா ஆக வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். அது ஸ்டாலின் மட்டும் தான். மாணவர்கள் அப்பா என அழைத்தால் என்னவாகும். 

இதையும் படிங்க: அதிமுக - தவெக கூட்டணி பேச்சுவார்த்தை? அரசியலில் யாரும் எதிர்பாராத தகவல் லீக்.!

திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை

மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்து விட்டார்களா? டீசல் - பெட்ரோல் விலை குறைக்கப்படும் என்று கூறிவிட்டு, டீசல் விலை இன்று வரை குறைக்கப்படவில்லை. வேலைவாய்ப்பை அதிகரிக்க, காலிப்பணியிடத்தை நிரப்புவதாக கூறினார்கள், கியாஸ் மானியம் ரூ.100 கொடுப்பதாக கூறினார்கள், இன்று வரை எந்த திட்டமும் நிறைவேறவில்லை.

கல்வித்துறை அமைச்சர் ரசிகர் மன்றத்திற்கு மட்டுமே தகுதியானவர்

தமிழ்நாடு மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். 2026 ல் மக்கள் திரும்பி அடிப்பார்கள். தகவல் தொழில்நுட்ப அறிவை மாணவர்களுக்கு ஏற்படுத்த ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அது இன்று வரை செலவு செய்யப்படவில்லை. பள்ளிக்கல்வித்துறை 0 அளவில் இருக்கிறது. அன்பில் மகேஷ் உதயநிதியின் ரசிகர் மன்ற தலைவராக இருப்பது மட்டுமே தெரிந்த விஷயம். இவர்களே இவர்களை பாராட்டிக்கொள்வது எப்படிப்பட்டது" என பேசினார்.

இதையும் படிங்க: அதிமுக கூட்டணி ரகசிய பேச்சுவார்த்தை - முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உறுதி.!

Read Entire Article