ARTICLE AD BOX

பிரபல பாடகர் கே.ஜே யேசுதாஸ். இவர் கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர். இவர் தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் மற்றும் ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் கிட்டத்தட்ட 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர் 8 தேசிய விருதுகளை பெற்றுள்ள நிலையில் அதுபோக ஏராளமான விருதுகளையும் வென்றுள்ளார்.
அது மட்டுமின்றி மத்திய அரசால் வழங்கப்படும் பத்மஸ்ரீ, பத்மபூஷன் மற்றும் பத்ம விபூஷன் ஆகிய விருதுகளையும் வென்றுள்ளார். இவருக்கு தற்போது 85 வயது ஆகும் நிலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதாவது ரத்த அணுக்கள் தொடர்பான பிரச்சனை காரணமாக சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.